சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

தோல்வியை பார்க்காத இயக்குனருடன் ஒப்பந்தமான ஜெயம்ரவி.. செம குஷியில் பிரதர்!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், சமீப காலமாக இவரது வெளியான படங்கள் பெரிதான வரவேற்பை பெறாத நிலையில், அடுத்தடுத்து ஜெயம் ரவி நடிப்பில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கின்றன. இதெல்லாம் ஜெயம் ரவியின் கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் தனது 15 வருட திருமண வாழ்க்கையில் இருந்து விலங்குவதாக அறிவித்தார். மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அதை நினைத்து உடைந்து போயி உட்காராமல், தனது கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

வெற்றிமாறனுடன் ஒப்பந்தம்

தற்போது ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக ‘பிரதர்’ படம் வெளியாக இருக்கிறது. எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியீட ரீலிஸ் ஆகவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிடுக்கிறது.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை இருப்பதாக ஓபனாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது இதற்கான பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. மேலும் வாடிவாசலுக்கு அடுத்ததாக வெற்றிமாறன் ஜெயம் ரவி படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

ஒரு பேச்சுக்கு வெற்றிமாறன் படம் பண்ணலாம் என்று சொல்லாமல், உண்மையிலேயே தற்போது இதற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்ய துவங்கி விட்டாராம். இந்த ஆசை, ஜெயம் ரவி-க்கு அவர் பேராண்மை படத்தில் நடிக்கும்போதே வந்ததாம். தற்போது அது உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம்.

- Advertisement -

Trending News