fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வெற்றிமாறனை புரட்டி போட்ட இரண்டு நாவல்கள்.. இது இல்லைன்னா வெற்றிமாறன் சினிமாவிலேயே இல்லையாம்!

India | இந்தியா

வெற்றிமாறனை புரட்டி போட்ட இரண்டு நாவல்கள்.. இது இல்லைன்னா வெற்றிமாறன் சினிமாவிலேயே இல்லையாம்!

இந்திய அளவில் சினிமா துறையில் புகழ் பெற்றவர் வெற்றிமாறன். இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு என்று அனைத்திலும் திறமை வாய்ந்தவர். 2014 நேஷனல் பிலிம் அவார்டு பெற்றவர் பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்கள் ஆறு தேசிய விருதுகளையும் பெற்றவர்.

பாலுமகேந்திராவின் அச்சிச்டன்ட் டைரக்டராக வெற்றிமாறன் வேலை பார்த்து உள்ளார். தமிழ்சினிமாவில் வளரும் இளைஞர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.

இவரின் படைப்புகள் அனைத்தும் நாவல்களை மையப்படுத்தியே இருக்கும். அதில் ஒன்று தான் சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரானது ‘விசாரணை’ திரைப்படம். வெற்றிமாறன் பல்வேறு தருணங்களில் புத்தகம் வாசிப்பதின் மூலம் அதன் முக்கியதுவத்தையும் தொடர்ந்து பேசி வருகிறார்.

அவ்வப்போது நேர்காணலில் பல வித்தியாசமான யுத்திகளை எப்படி கையாள வேண்டும், சினிமா கற்றுக் கொடுப்பதையும் விளக்கிக் கூறுவார். அப்படி சமீபத்தில் நடைபெற்ற ‘பிலிம் கம்பெனியின் சவுத்’ என்ற இணையதளத்தில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், பாசு உள்ளிட்டோர் வெற்றி மாறனிடம் வீடியோ மூலம் கலந்துரையாடல் செய்தனர்.

அதில் நீங்கள் பரிந்துரைக்கும் முக்கியமான புத்தகங்கள் எது என்ற கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், JIANG RONG எழுதிய ‘Wolf Totem’ மற்றும் அலெக்ஸ் ஹெலியின் ‘ரூட்ஸ்’ ஆகிய இரு புத்தகங்களும் பெயரை குறிப்பிட்டு உள்ளார்.

இலக்கிய அளவில் மிகவும் தரமான புத்தகங்கள். ‘Wolf Totem’ என்ற நாவலை ‘ஓநாய் குலச்சின்னம்’ என்ற பெயரில் எழுத்தாளர் ஜெயமோகனின் மொழிபெயர்ப்பில் தமிழிலும் வெளியாகியுள்ளது. இதே புத்தகத்தை வெற்றிமாறன் ‘அதிர்வு’ என்று தன்னுடைய சொந்த பதிகத்தின் மூலம் வெளியிட்டார்.

vetrimaran-cinemapettai

vetrimaran-cinemapettai

ரூட்ஸ் என்ற நாவளை சின்னத்தம்பி முருகேசனின் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழ் இலக்கிய நாவல்களில் இந்த இரு நாவல்களும் பெரிதாகப் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top