Connect with us

Cinemapettai

ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவர்தான்.. நல்லவேளை மாத்திட்டாங்க.. ஷூட்டிங் நடந்த புகைப்படம்

dhanush-adukalam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவர்தான்.. நல்லவேளை மாத்திட்டாங்க.. ஷூட்டிங் நடந்த புகைப்படம்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஆடுகளம். தனுஷின் சினிமா கேரியரில் மிக முக்கிய படமாகவும் இது கருதப்பட்டது. ஆடுகளம் படத்திற்காக தனுஷ் தேசிய விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேவல் சண்டையை மையப்படுத்தி கமர்சியல் அம்சமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஜி வி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியிருந்த ஆடுகளம் படத்தின் பாடல்கள் இன்றும் பலரது பிளே லிஸ்டில் உள்ளது.

அதிலும் வெள்ளாவி வெச்சு வெளுத்தாங்களா எனும் பாடல் வரிக்கு ஏற்ப பக்காவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் டாப்ஸி. ஆனால் முதல் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் திரிஷா தான்.

பாதி வரை நடித்த திரிஷா அதன் பிறகு படத்திற்கு செட் ஆகவில்லை என்பதால் அவரை மாற்றி விட்டு டாப்ஸியை இறக்கினார் வெற்றிமாறன்.

aadukalam-trisha

aadukalam-trisha

அங்குதான் வெற்றிமாறனின் திறமை ஒளிந்திருக்கிறது. பாதி படத்திலேயே திரிஷா இதற்கு ஒத்து வரமாட்டார் என கண்டறிந்து உடனடியாக வெளியேற்றினார். முதலில் அந்த படத்தில் திரிஷாவை நடிக்கவைக்க வெற்றிமாறனுக்கு பெரிதும் உடன்பாடு இல்லையாம்.

தனுஷ்தான் சிபாரிசு செய்ததாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top