fbpx
Connect with us

Cinemapettai

வெற்றிமாறன் காட்டில் அடைமழை.. விஜய், சூர்யாவை தொடர்ந்து அவர் இயக்கப் போகும் முன்னணி நடிகர் யார் தெரியுமா?

vetrimaran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெற்றிமாறன் காட்டில் அடைமழை.. விஜய், சூர்யாவை தொடர்ந்து அவர் இயக்கப் போகும் முன்னணி நடிகர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் தற்போது அதிக டிமாண்ட் உள்ளவர் என்றால் அது வெற்றிமாறன். இவர் இயக்கிய அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் அசுரத்தனமான வெற்றியைப் பெற்று வெற்றிமாறன் வாழ்க்கையில் முக்கியமாக அமைந்தது.

அசுரன் வெற்றி காரணமாக தற்போது முன்னணி நடிகர்கள் அனைவரும் வெற்றிமாறன் வளைத்துப் போட திட்டம் போட்டுள்ளனர். அந்த வகையில் முதலில் வந்தவர் தான் சூர்யா. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்தின் பெயர் வாடிவாசல் என சமீபத்திய விருது விழா ஒன்றில் வெற்றிமாறன் நேரடியாக அறிவித்தார்.

ஆனால் அதற்குள் சூர்யா தற்போது ஹரியின் படத்திற்கு தயாராகி கொண்டிருப்பதால் வெற்றிமாறனுக்கு கேப் விழுந்து விட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் வெற்றிமாறன் தளபதி விஜய்யை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். அதுவும் நிச்சயம் நடைபெறும் என தளபதி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு படங்களும் தள்ளிக் கொண்டு செல்வதால் தற்போது வெற்றிமாறன் நடிகர் விக்ரமை வைத்து விரைவில் ஒரு படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். சூரி படத்தை முடித்த பிறகு வெற்றிமாறனும் கோப்ரா படத்தை முடித்த பிறகு விக்ரமும் ஃப்ரீயாக இருப்பதால் அந்த கேப்பில் ஒரு படத்தை முடித்து விட வேண்டும் என இருவரும் திட்டம் போட்டுள்ளனர்.

அனேகமாக தாணு தான் தயாரிப்பார் என தெரிகிறது. வெற்றிமாறனை தாணு குத்தகைக்கு எடுத்துட்டாரோ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top