Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-11

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அளவுக்கு மீறி ஆசைப்பட்டு அல்லோலப்படும் தனுஷ் பட இயக்குனர்.. வருத்தத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தனுஷின் ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான வெற்றிமாறன்.

வெற்றிமாறன்,தனுஷ் காம்போவில் வெளியாகும் படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அந்த வகையில் இவர்களுடைய படங்கள் அனைத்தும், ஆடுகளம் முதல் அசுரன் வரை தேசிய விருதுகள் வாங்கும் அளவுக்கு தரமான படைப்பாகவே பார்க்கப்பட்டது.

எப்போதுமே வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்யும் வெற்றிமாறன், தனது ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தது மூணு வருஷமாவது மெனக்கெடுவாரு.

தயாரிப்பாளர் தாணுவின் ‘வாடிவசல்’ படத்தை இயக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியிருக்கும் வெற்றிமாறன், தனுஷுடன் இரண்டாவது படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இதுவும் போதாது என்று இன்னொரு படத்திற்கு தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் கைநீட்டி காசு வாங்கி இருக்கிறார்.

ஆசை யாரை விட்டுவச்சு, தொடர்ந்து மூன்று படங்களுக்கு ஒப்புக் கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் யாரோட படத்தை முதல்ல பண்றதுன்னு குழப்பத்தில் திக்குமுக்காடி இருக்கிறார்.

ஒரு படம் பண்ணுனாலும் தரமா பண்ணனும் என்கிற வெற்றிமாறனின் கொள்கையே! பணத்தாசைய இல்ல அவருக்கு இருக்கும் ஓவர் கன்பிடன்ட்டா.? இதை நினைத்து ரசிகர்கள் ரொம்பவே வருத்தத்தில் உள்ளனர்.

Continue Reading
To Top