Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெற்றிமாறன் படத்திற்காக புதிய ஸ்டூடியோவில் இசையமைக்கும் இளையராஜா.. இணையத்தில் கொடிகட்டி பறக்கும் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜாவை அசைத்து கொள்ள முடியாது என்றுதான் கூற வேண்டும் அந்த அளவிற்கு தமிழகத்தில் அனைத்து ரசிகர்களையும் தன் இசையால் கட்டி வைத்துள்ளார்.
பிரசாந்த் ஸ்டுடியோவிற்கும் இளையராஜாவிற்கும் சில கருத்து மோதல்கள் ஏற்படவே இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த இளையராஜா தனக்கென்று ஒரு ஸ்டுடியோ அமைத்துக் கொள்வேன் எனக் கூறிவிட்டு பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறினார்.
இளையராஜா சொன்னது போலவே மிக பிரம்மாண்டமாக ஒரு புதிய ஸ்டுடியோவை கட்டியுள்ளார். இந்த ஸ்டுடியோவிற்கு விஜய் சேதுபதி மற்றும் சூரி போன்ற நட்சத்திரங்கள் வந்துள்ளனர்.

ilayaraja
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தில் இளையராஜா இசையமைக்க உள்ளார். தற்போது இப்படத்தின் ஒரு பாடலுக்கு இன்று புதிதாக கட்டியுள்ள இளையராஜா ஸ்டூடியோவில் இசையமைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

vijay sethupathi
இனிமேல் இளையராஜா இசையமைக்கும் படங்கள் அனைத்தும் புதிய ஸ்டுடியோவில் தான் இசையமைப்பார் என சினிமா வட்டாரத்தில்லிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

vetrimaran ilayaraja

ilayaraja-studio-2
