Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலாவை தொடர்ந்து வெற்றிமாறனுக்கும் கம்பி நீட்டிய சூர்யா.. தெள்ளத் தெளிவாக ரோலக்ஸ் ஆடப்போகும் ஆட்டம்

தன்னுடைய அடுத்த படத்திற்கு பக்கா பிளான் போட்டிருக்கும் சூர்யா.

suriya-bala-vetrimaaran

Actor Suriya: தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கனாக பார்க்கப்படும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 10 மொழிகளில் 3டி முறையில் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருக்கும் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள விட்டது.

ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த படத்தில் அசுரத்தனமாக சூர்யா நடித்திருக்கிறார். இந்நிலையில் சூர்யா, கங்குவா படம் முடிந்த கையோடு பல பிளான் போட்டு வைத்திருக்கிறார். பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து கொண்டிருந்த வணங்கான் படம் திடீரென்று டிராப் ஆனது அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

Also Read: இனி தனியா,கெத்தா நான் தெரியணும்.. பல லட்சம் செலவு செய்து கார்த்திக் எடுக்கும் புது அவதாரம்

தற்போது பாலா வணங்கான் படத்தை அருண் விஜய்யை வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார். அதேபோல்தான் இப்போது வெற்றிமாறன் இயக்க இருக்கும் வாடிவாசல் படத்திற்கும் சூர்யா கம்பி நீட்ட போகிறார். ஏனென்றால் தற்போது ஸ்பீடாக இருக்கும் சூர்யாவுடன் வெற்றிமாறன் ஓட தயாராகவில்லை.

இப்போது விடுதலை 2 படத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால், வாடிவாசல் படம் எடுப்பதற்கு எப்படியும் வெற்றி மாறன் லேட் ஆக்கி விடுவார். அதனால் கங்குவாக்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை பற்றி இப்பமே ஸ்கெட்ச் போட்டுள்ளார். அதனால் லோகேஷுக்கு தூது விட்டிருக்கிறார் சூர்யா.

Also Read: இந்த அஞ்சு பேருல தேசிய விருது வாங்க தகுதியான ஒரே ஹீரோ.. வேற யாரையும் வச்சு யோசிக்க கூட முடியாது

ரோலக்ஸ் என்று பெயரிடப்பட்ட ஒரு படத்தை எடுப்பதாக ஏற்கனவே பேச்சுவார்த்தை அடிபட்டது. ரஜினி- லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படம் மிகக் குறுகிய காலத்திலேயே முடிந்துவிடும். அநேகமாக லோகேஷ் மற்றும் சூர்யாவின் ரோலக்ஸ் படத்தை அடுத்ததாக எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் வெறும் கம்மியான நாட்கள் தான் லோகேஷுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். கங்குவா முடித்து வரவும், லோகேஷ் ரஜினி படத்தை முடித்து வரவும் கரெக்டாக இருக்கும் என இப்பவே ஸ்கெட்ச் போட்டு வருகிறார். நிச்சயம் இந்த படம் விக்ரமை விட வெறித்தனமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: நடிப்பு இல்லைனாலும் பட வாய்ப்புக்கு மட்டும் குறைச்ச இல்ல.. வாரிசு நடிகை என்பதால் சூர்யாவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு

Continue Reading
To Top