செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

வெற்றிமாறனே நினைச்சாலும் தனுஷை இனிமேல் அப்படி நடிக்க வைக்க முடியாது.. உண்மையை பகிர்ந்த பிரபலம்

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ராயன். இப்படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். இப்படத்தில் அவருடன் இணைந்து செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

சக்பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.160 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தை அடுத்து, தனுஷ் 3வதாக இயக்கி வரும் படம் இட்லி கதை, இப்படத்துக்கு ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தை தனுஷே தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஷாலினிஉ பாண்டே, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து தனுசு இயக்கி வரும் மற்றொரு படம் நிலவுக்கு என்னடி என் மேல் கோபம். இப்படத்தை கஸ்தூரி ராஜாவுடன் தனுஷ் தயாரித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ப்விஷ், அனிகா, சுரேந்திரன் . பிரியா, பிரகாஷ் வாரியர். ரபியா கட்டூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 31 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

தனுஷை வைத்து நீண்ட நாட்கள் ஷூட் செய்வாரா வெற்றிமாறன்?

இதையடுத்து, தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 படத்தில் நடிப்பார் எனவும், செல்வராகவன் ஆயிரத்தின் ஒருவர் 2 ஆம் பாகத்தில் நடிப்பார் எனவும் பேசப்படுகிறது.

இந்த நிலையில், வெற்றிமாறன் படத்தில் இதற்கு முன் நடித்தது போல் நடிக்க மாட்டார் என பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; “வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களில் வெற்றிமாறன் சொன்னதை கேட்டு, தனுஷ் நடித்திருந்தார். ஆனால், இப்போது தனுஷ் உயரம் வேறு. அவர், கோலிவுட்டை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் சென்று, தேசிய விருதுகளும் வாங்கிவிட்டார். அதனால் அவர் உயரமும் வளர்ச்சியும் அதிகம்.

அதனால், விடுதலை படத்தில் 8 நாள் காஷ்ஷீட் கேட்டிருந்த நிலையில் விஜய் சேதுபதி 200 நாட்களுக்கு மேல் கால்ஷூட் கொடுத்து அதில் நடித்த மாதிரி, தனுஷால் வெற்றிமாறனுடன் நடிக்க முடியாது. வேறெந்த இயக்குனருடனும் பணியாற்ற முடியாது. அதற்கு தனுஷே சொந்தமாகப் படமெடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஒருவேளை தனுஷை வைத்து அப்படி நீண்ட நாட்களுக்கு எடுக்க வேண்டுமானல் முதலில் எழுத வேண்டும், அதற்கு வெற்றிமாறனுக்கும் நேரம் வேண்டும். ஒருவேளை புதிய படம் என்றால், வடசென்னை 2 -வை தாண்டித்தான் வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் நடிக்க வந்த புதிதில் பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து, இன்று, தன் கேரியலில் சிறந்த நடிகராக உயர்ந்துள்ள தனுஷுகு பல படங்களில் அவர் நடிப்புத் திறமையை மெருகேற்றிய வெற்றிமாறனே அவர் உயரத்தை உணர்ந்து அவரிடம் அவ்வளவு நாள் கால்ஷீட் கேட்க முடியாது. குறுகிய நாட்களில் தான் முடித்துக் கொள்ள வேண்டும் என நெட்டின்சன்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News