fbpx
Connect with us

Cinemapettai

வெற்றிமாறனுக்கு திடீர் அழைப்பு விடுத்த தளபதி விஜய்.. அப்போ சூர்யா பட நிலைமை?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெற்றிமாறனுக்கு திடீர் அழைப்பு விடுத்த தளபதி விஜய்.. அப்போ சூர்யா பட நிலைமை?

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போது முன்னணி இயக்குனராகவும் பல நடிகர்களின் பேவரைட் இயக்குனராகவும் இருப்பவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் ஹிட் கொடுத்த வெற்றிமாறன் தற்போது முன்னணி நடிகர்கள் கொக்கி போட்டு இழுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் அசுரன் படத்தை தொடர்ந்து கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்கப் போகிறார் என தகவல்கள் கிடைத்தது.

ஆனால் கைவசம் சூரி படம் ஒன்று பாதியில் நிற்பதால் அதை முதலில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதனைத்தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் படத்தில் நடிக்க உள்ளாராம். இதற்கு அடுத்தது தான் தளபதி விஜய்யின் படம் என்கிறது கோலிவுட்.

சமீபத்தில் டுவிட்டரில் பிரபலம் ஒருவர் தளபதி விஜய் வெற்றிமாறன் படத்திற்காக 150 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாகவும், ஒரே வருடத்தில் இரண்டு படங்களில் நடிக்க விஜய் பிளான் பண்ணி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவை கேட்ட விஜய் ரசிகர்கள் குஷியடைந்தாலும் சூர்யா ரசிகர்கள் அவரை வட சட்டியில் போட்டு தாளிக்காத குறையாக திட்டி வருகின்றனர். தளபதி65 படத்தை முடித்த பிறகு தளபதி66 படத்தை வேண்டுமானால் விஜய் வெற்றிமாறனுடன் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதுவும் 2022 தீபாவளி ரிலீஸ் தான் என்பது தற்போதைக்கு உறுதியான தகவல். காரணம் 2021 தீபாவளிக்கு முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் படம் வெளியாக உள்ளது. இதே தீபாவளியில் தான் சூர்யாவின் வாடிவாசல் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபலமாகி விட்டாலே எதையாவது உளறி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதையே சிலர் வேலையாக வைத்துள்ளனர்.

Continue Reading
To Top