Tamil Cinema News | சினிமா செய்திகள்
5வது முறையாக பிரபல இயக்குனருடன் கூட்டணி போடும் தனுஷ்.. இந்த வாட்டி வேற லெவல்
By
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தனுஷ் கூட்டணியில் வெளிவந்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
வெற்றிமாறன் கதாபாத்திரத்தை மனதில் பதியும்படி அமைப்பதில் கைதேர்ந்தவர் என்றே கூறலாம், அந்த வகையில் அசுரன் படத்தில் சிவசாமி இந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் விதைக்கப் பட்டது.
தற்போது வெற்றிமாறன் சூரி மற்றும் சூர்யாவை வைத்து படங்களை இயக்கி வருகிறார். அடுத்தபடியாக தனுஷ்டன் ஒரு படத்தில் இணைய போவதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
வெற்றிமாறனின் கதைக்களம் எப்பொழுதுமே ஒரு நாவலை தழுவியதாகவே இருக்கும், ஏற்கனவே வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவான படங்களின் இரண்டாம் பாகம் இல்லை என்பதையும் உறுதி செய்துவிட்டனர்.
இதனால் இந்த படத்தின் கதைக்களம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதை தற்போது தெளிவுபடுத்தி உள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் தனுஷின் ஜகமே தந்திரம் படம் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது, அதுமட்டுமில்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
