Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்க்காக எழுதிய கதை இல்லை.! ஆனால் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும்.! இயக்குனர் வெற்றிமாறன் பளீர் பேட்டி.!
சினிமாவில் வெற்றி மாறன் படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும், இந்த நிலையில் இவரின் வடசென்னை படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த வாரம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

vada chennai
இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர்கள், இயக்குனர்கள் என பலருக்கு தேசிய விருது கூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது எனக் கூறுகிறார்கள். சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது, இதில் பேசிய வெற்றிமாறன் விஜய்க்கு எழுதிய கதை பற்றி கூறியுள்ளார்.
வெற்றிமாறன் முதல் முதலாக எழுதிய கதை Erich Segal, The Classஎன்ற நாவலை வைத்து ஒரு கதையை எழுதினார் அதை வெற்றிமாறன் நண்பர் பார்த்து படித்துவிட்டு விஜயின் அப்பாவிடம் சொல்ல முடிவெடுத்தார், முதல் முறையாக கதை சொல்ல முடிவெடுத்தார் ஆனால் முதல்முறை என்பதால் விஜயிடம் சரியாக கதை சொல்ல வரவில்லை ஆனால் இந்த கதை விஜய்க்காக எழுதவில்லை விஜய் நடித்தால் நன்றாக இருக்கும், நண்பன் படத்தை போல் ஒரு சிறந்த கதை என பேசினார்.
