வெற்றிமாறன் கடைசியாக இயக்கிய படம் விடுதலை 2. இந்த படத்தை இயக்குவதற்கே கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டார். 2023ஆம் ஆண்டு முதல் பாகம் வெளிவந்தது ஆனால் இரண்டாம் பாகத்திற்கு முழு திருப்தி அடையாமல் மீண்டும் மீண்டும் நாட்களை எடுத்துக் கொண்டார் வெற்றி.
விடுதலை 2 படத்தை எல்டர்டு குமார் தயாரித்துள்ளார் . இப்பொழுது வெற்றிமாறன் கூட்டணியில் மற்றொரு படத்தையும் தயாரிக்க உள்ளார். இதற்கிடையே கடந்த சில வருடங்களாக வெற்றிமாறனிடம் தனக்கு ஒரு படம் பண்ணுமாறு தனுஷ் கதை கேட்டு வருகிறார்.
வெற்றிமாறன் இயக்கவிருக்கும் வாடிவாசல் படம் சூர்யா நடிக்காவிட்டால் தான் அந்த படத்தில் நடிக்க விரும்புவதாகவும் தனுஷ் அவரிடம் கேட்டுக் கொண்டார். இப்பொழுது விடுதலை 2 தயாரிப்பாளர் எல்டர்டு குமார், வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகப் போகும் கதை பல்பு எறிய தொடங்கியுள்ளது.
இதனால் இவர்கள் இருவரும் தனுஷ் காதுகளுக்கு எட்டாமல் ஒரு காரியத்தை செய்துள்ளனர். அதாவது இவர்கள் கூட்டணியில் ரெடியாகும் படத்திற்கு தனுஷ் தான் ஹீரோ என அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள். இது தனுஷிற்கு தெரியாமல் நடந்துள்ளது.
முன்பு வெற்றிமாறன் இடம் தனுஷ் கதை கேட்டதால் இப்பொழுது இந்த ப்ராஜெக்டை அவரை வைத்து கமிட் செய்து விட்டார்கள். தம்பி இருக்க பயமேன் என வெற்றிமாறன் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் தனுஷ் கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்.