Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வடசென்னை பார்ட் 2 விற்கு முன் பிரபல நாவலை படமாக்குகிறாரா இயக்குனர் வெற்றிமாறன்.

vetrimaran

வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை படங்களை தொடர்ந்து இயக்கி வெற்றிபெற்றுள்ள படம் வடசென்னை. காங்ஸ்டார் ட்ராமா மூன்று பகுதிகளாக ரிலீசாக உள்ளது. கிட்டத்தட்ட அடுத்த பார்ட்டிற்கு தேவையான 40 சதவிகித போர்ஷன் இப்பொழுதே ரெடி ஆக உள்ளது. இந்நிலையில் வெற்றிமாறன் பார்ட் 2 ஷூட்டிங் துவக்குவதற்கு முன் நாவலை அடிப்படையாக கொண்டு படம் இயக்குவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

லாக் அப் என்ற நாவலை தழுவி தான் விசாரணை படத்தை இயக்கினார். இப்படத்தினை வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்தனர்.

வெக்கை

இந்த நாவலை பூமணி எழுதியுள்ளார். இதனை தழுவியே வெற்றிமாறனின் புதிய படம் இருக்குமாம். மீண்டும் வடசென்னைக்குள் நுழவதற்கு முன், இந்த கிராமிய கதையா இயக்குவார் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

கதை

விவசாய நில பிரச்சனையில் நடந்த கொலையின் தொடர்ச்சிதான். எதிரியின் கையை வெட்ட நினைத்து, தவறுதலாக மார்பின் விலாவில் குத்தி சாகடித்துவிட்டு ஓடும் 15 வயது சிறுவனாகிய செலம்பரத்தின் (சிதம்பரம்) பிம்பத்துடன் நாவல் தொடங்குகிறது. ஒருவார கால இடைவெளியில் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு தனது தந்தையுடன் தலைமறைவாக எங்கெல்லாம் சென்று பதுங்கி வாழுகிறான் என்பதுதான் கதை.

தனுஷ் நடிப்பாரா அல்லது தயாரிப்பில் உடன் இருப்பாரா, அல்லது இது வெறும் கிசுகிசுவா என்பதில் விரைவில் நமக்கு தெரியவரும். அதுவரை காத்திருப்போம், வடசென்னையை கொண்டாடுவோம்.

Vekkai

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top