Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெற்றிமாறன் லிஸ்டில் பார்ட்-2 காக கேப்பில் இணைந்த நடிகர்.. ஓரம் கட்டப்பட்ட தளபதி படம்!
தமிழ் சினிமாவில் தற்போதைய சென்சேஷனல் இயக்குனர் என்றால் வெற்றிமாறன் தான். ஒவ்வொரு நடிகரும் வெற்றிமாறன் படத்தில் நடிக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள்.
அந்த வகையில் எப்போதுமே பிசியாக இருக்கிறார் வெற்றிமாறன். அசுரன் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்திற்குப் பிறகு தற்போது சூரியை வைத்து மிகச் சிறிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
முதலில் வெளிநாட்டில் படமாக்க இருந்த அந்த படத்தை இந்தியாவில் காட்டுக்குள் தயாராகும்படி கதையை மாற்றியமைத்து விட்டாராம் வெற்றிமாறன். இதனால் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு முதலில் சூரி படம் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் வெற்றிமாறன்.
அதன் பிறகு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் சூர்யாவின் வாடிவாசல். இந்த படத்துக்காக தற்போது காளைகள் தேர்வு பணிகள் நடந்து வருகின்றன. இப்போது இருந்து சூர்யாவும் காளைகளுடன் பழகி வருகிறாராம்.
அதன்பிறகு தளபதி விஜய் உடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெற்றிமாறனுடன் அவருடைய சூப்பர் ஹிட் நடிகர் ஒருவர் இடையில் புகுந்து ஆட்டையை குழப்பியுள்ளார்.
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான நான்கு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது ஐந்தாவது முறையாக ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள். கோ படத்தை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிப்பில் ஒரு படத்தில் இணைய உள்ளார்களாம்.
வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் வட சென்னை தனுஷின் சொந்த தயாரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. வேறொரு கதை களத்தில் உருவாக இருக்கிறதாம் அந்த படம்.
இதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இருந்தாலும் எந்த படம் முதலில் என்பதை வெற்றிமாறன் தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
