Videos | வீடியோக்கள்
திமில பிடிக்கும் போது, ஒரு வீரம் வரும் பாரு அது சாமி கொடுத்த வரம்.. வாடி வாசலுக்கு முன்பே சீறிவந்த வெற்றிமாறனின் பேட்டைக்காளி

வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை அடுத்து அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். பல மாதங்களாகவே இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்திற்காக சூர்யா பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் பேட்டைக்காளி என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் அட்டகாசமாக வெளியாகி உள்ளது. கலையரசன், கிஷோர், ஷீலா உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி-யில் வெளியாக இருக்கிறது.
Also read : பிரபாகரனின் வாழ்க்கையை படமாக்கும் வெற்றிமாறன்.. தமிழினத்தின் தலைவனாக நடிக்க போகும் ஹீரோ!
நம் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே உலகின் மூத்த குடிமக்களின் பாரம்பரிய விளையாட்டு சார்ந்த பதிவு என்னும் எழுத்துடன் காளை சீறி வருகிறது. அடங்காத திமில், கூரான கொம்பு என்று சிலிர்த்துவரும் காளையை பார்க்கும் போதே படத்தின் மீதான சுவாரஸ்யம் கூடுகிறது.
அதைத்தொடர்ந்து ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியிலும் இந்த காளை தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வைத்து ஊருக்குள் இரு கோஷ்டிக்குள் நடக்கும் பகை, கலவரம் என்று ட்ரெய்லர் முழுவதும் அனல் தெரிகிறது. அதிலும் ஒவ்வொரு வசனங்களும் நிச்சயம் கைத்தட்டலை அள்ளும்.
Also read : தனுஷை துன்புறுத்திய வெற்றிமாறன்.. உண்மையை போட்டுடைத்த பிரபலம்
அந்த வகையில் திமில பிடிக்கும் போது உள்ளுக்குள்ள ஒரு வீரம் வரும் அது கடவுள் கொடுத்த வரம், குத்துனா குடல் தெறிக்கணும் போன்ற பல வசனங்கள் ரசிக்க வைக்கிறது. இதுவே படம் எந்த அளவுக்கு வெறித்தனமாக இருக்கும் என்பதையும் காட்டுகிறது. இப்படத்தின் மூலம் கலையரசன் அனைவரின் கவனத்தையும் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
இப்படி முழுக்க முழுக்க ஜல்லிகட்டை மையப்படுத்தி வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வாடிவாசலுக்கான முன்னோட்டமாகவே தெரிகிறது. தயாரித்த படமே இப்படி என்றால் அவர் இயக்கும் வாடிவாசல் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். அந்த வகையில் வெற்றி மாறனின் இந்த பேட்டைக்காளி பலரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.
