அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் ஒரு பக்கம் சம்பளத்தை ஏற்றினால் அவரை விட அதிகமாக சம்பளத்தை வெற்றிமாறன் உயர்த்தி விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சினிமா என்பதே பணம் கொழிக்கும் தொழில் தான் என்பது தெரிந்த விஷயம். அந்த வகையில் ரஜினி, விஜய், அஜித் போன்றோர் தற்போது நூறு கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு அடுத்தபடியாக சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் போன்றோர் 20 கோடிகளுக்கும் மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். நடிகர்களுக்கு மட்டும் அல்லாமல் இயக்குனர்களுக்கும் பல கோடிகளில் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.
சங்கர், அட்லீ, முருகதாஸ் ஆகிய இருவர் மட்டுமே தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிக சம்பளம் வாங்கி கொண்டிருந்தனர். ஆனால் தற்போது முருகதாசை கீழே இறக்கிவிட்டு அவருடைய இடத்தை பிடித்து விட்டாராம் வெற்றிமாறன்.
வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்திற்கு சுமார் 23 கோடி ரூபாய் சம்பளம் பேசி உள்ளாராம் வெற்றிமாறன். இது தனுஷை விட 5 கோடி அதிகம் என்கிறது கோலிவுட் வட்டாரம். தனுஷுக்கு வெறும் 18 கோடி தான் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளன. இதனால் தனுஷ் சம்பளம் உயரும் என்று பார்த்தால் தனுஷை விட சம்பள விஷயத்தில் அதிவேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார் வெற்றிமாறன்.