வாடிவாசல் மூடி வாசல் ஆச்சா.?வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்

Vetrimaran: வெற்றிமாறன் படம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கும். அந்த வகையில் விடுதலை என்ற ஹிட் படத்தை கொடுத்த வெற்றிமாறன் அடுத்ததாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துக் வருகிறார்.

இந்நிலையில் சில வருடங்களாகவே வாடிவாசல் படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதாவது வெற்றிமாறன் மற்றும் சூர்யா முதல் முறையாக கூட்டணி போட்டிருக்கும் படம் தான் வாடிவாசல். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

சில காரணங்களினால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே சென்றது. இதனால் பலரும் இந்த படம் டிராப்பானதாக வதந்தியை கிளப்பிவிட்டனர். அதாவது பிரபல யூட்யூப் சேனலில் வாடிவாசல் மூடிவாசலா என்று கேலியாக பேசி இருந்தனர்.

வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

இதற்கு சரியான பதிலடி கொடுக்கும்படி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன் மேடையில் வாடிவாசல் பற்றி பேசியிருந்தார். அதாவது விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மிக விரைவில் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியிருந்தார்.

மேலும் வெற்றிமாறன் அருகில் இருந்த வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் எஸ் தாணு உலக தமிழருக்கு அங்கீகாரமாக வாடிவாசல் படம் அமையும் என்று கூறியிருந்தார். இப்போது இந்த செய்தி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

சூர்யாவின் கங்குவா படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் படத்தை மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வாடிவாசல் படப்பிடிப்பும் மிக விரைவில் தொடங்க இருப்பது மேலும் செம ட்ரீட் ஆக அமைந்திருக்கிறது.

மாஸ் காட்டும் கங்குவா சூர்யா

Next Story

- Advertisement -