Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது இவருக்கு கிடைக்க வேண்டும் – மனதை நெகிழ வைத்த சம்பவம் குறித்து தன் கருத்தை பதிவிட்ட விவேக் !
சாட்டை பட பாணியில் தமிழகத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதற்குத்தான் விவேக் இப்படி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
பகவான்
இவர் வெளிகரம் அரசு பள்ளயில் ஆசிரியராக கடந்த 2014 ஆம் ஆண்டு சேர்ந்தார். இவர் மாணவர்களுடன் நன்றாக பழகி, அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்தியுள்ளார். மேலும் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படும் படியும் பாடம் எடுத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு திருத்தணி, அருகிலுள்ள அருங்குளம் பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் வகுப்பினை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு ஆசிரியரின் இடமாற்றம் ,மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது. அப்படி என்றால் அவரது பண்பை நினைத்துப் பாருங்கள். இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் @News18TamilNadu @news7tamil @ThanthiTV @sunnewstamil @PTTVOnlineNews pic.twitter.com/m0Y19NqZUc
— Vivekh actor (@Actor_Vivek) June 22, 2018

Bagavan
அப்பொழுது ட்ரான்ஸபார் ஆர்டர் பெற வந்த தங்கள் ஆசிரியரை வழி மறித்து, கதறி அழ தொடங்கிவிட்டனர். இதனால் அங்கு மிகவும் எமோஷனல் ஆகிவிட்டார் ஆசிரியர் பகவான்.

Bagavan
இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆசிரியரின் ட்ரான்ஸபார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bagavan
சூப்பர். பள்ளிக் கல்வித்துறை மற்றும் அதன் அமைச்சருக்கும் உயர் கல்வி அதிகாரிகளுக்கும் நம் நன்றியும் பாராட்டும்! இவர் தான் “ஆதி பகவன்”! https://t.co/jQ2bhQiV3j
— Vivekh actor (@Actor_Vivek) June 22, 2018
