அஜித் யார் எந்த வேலையில் ஜொலித்தாலும் நேரில் அழைத்து பாராட்டுவார். இவை வெளியே தெரியாமல் இருக்கலாம், ஆனால், பலரையும் அழைத்து அவர்களின் உழைப்பை பாராட்டுவார்.
 
அந்த வகையில் திரைப்பயணத்தில் வெற்றிக்காக போராடிய அருண் விஜய்க்கு தன்னுடன் நடிக்கும் வாய்ப்பை அளித்து, அவருக்கு என ஒரு மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தார்.
 
இன்று அருண் விஜய் நடித்த குற்றம்-23 படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது, இதில் இவருடைய தந்தை விஜயகுமார், என் மகனை ஊக்கப்படுத்தி இந்த இடத்திற்கு கொண்டு வந்த அஜித்திற்கு நன்றி என மேடையிலேயே கூறினார்.