Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகை மரணம்.! திரையுலகமே கண்ணீர்.. யார் அவர் ?
மும்பை: பழம் பெரும் பாலிவுட் நடிகை, ரீமா லாகு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 59.
பழம்பெரும் நடிகையான ரீமா லாகு, மாரடைப்பு காரணமாக நேற்று இரவு கொக்கிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை 3 மணிக்கு மரணமடைந்துள்ளார்.

மெய்னே பியார் கியா என்ற திரைப்படத்தில் சல்மான்கானின் தாயாராக நடித்ததன் மூலம் மிகவும் பிரபரலமானவர் இவர். இவர் புனேயில் பள்ளி கல்வி பயின்ற நாள் முதல் நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார்.
முதலில் மராத்தி திரைப்படங்களில் நடித்த இவர் 1970களில் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மராத்தி நடிகர் விவேக் லாகுவை திருமணம் செய்த இவர் சில வருடங்கள் பிறகு திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்தனர். இத் தம்பதிக்கு மிருமாயீ என்ற மகள் உள்ளார். அவரும் நடிகையாகும்.
