Connect with us

Cinemapettai

வைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.

Photos | புகைப்படங்கள்

வைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.

ஜிப்ஸி

ராஜு முருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஜீவா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாச்சல் பிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடிக்கிறார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன். செல்வகுமார் ஒளிப்பதிவு, எடிட்டிங் ‘அருவி’ படப்புகழ் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா. பாடல்களை யுகபாரதி எழுதுகிறார்.

gypsy

வெரி வெரி பேட்

சில நாட்களுக்கு முன் பாடலின் ப்ரோமோ வெளியானது. அதில் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சிறைக்குள் இழுத்துச் செல்லப்படுவார் . அங்கு சமூக ஆர்வலர்கள் (போராளிகள்) பலர் இருப்பார் . திருமுருகன் காந்தி, பியூஸ் மணுஷ், திருநங்கை கிரேஸ் பாணு, முகிலன் உள்ளிட்டவர்கள் அங்கு சிறைவாசிகளாக.

ஒரு பாட்டு பாடினேன், என்று ஆரம்பிக்கும் இப்பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் பாடியுள்ளார். யுக பாரதி பாடலை எழுதியுள்ளார்.

பாடலின் கருத்து நலன் புரட்சிகரமான சிந்தனையில் உள்ளது. சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட்டிங் ஆகிறது இப்பாடல்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top