திரையரங்குகள் தற்போது நாள் ஒன்றுக்கு நான்கு அல்லது ஐந்து காட்சிகள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் விரைவில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகின்றது.

இதுகுறித்த சட்ட வரைவு அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டு, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் கருத்தை அறிய அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வரைவு அறிக்கையில் உள்ள அம்சங்களில் மாற்றம் செய்ய மாநில அரசுகளின் ஆலோசனைகளும் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தால் திரையரங்குகள் மட்டுமின்றி கடைகள், சரக்கு கிடங்குகள் உள்பட தொழில் நிறுவனங்களும் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த சட்டம் அமலுக்கு வந்தவுடன் தொழிலாளர்கள் நலன் மற்றும பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பெண் தொழிலாளர்களை இரவுப் பணியில் ஈடுபடுத்தப்படும்போது, அவர்களுக்கு வாகன வசதி மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை அந்தந்த நிறுவனங்கள் செய்து தருவது கட்டாயமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

24 மணி நேரமும் திரையரங்குகள் இயங்கினால் சாதாரண நாளில் நாள் ஒன்றுக்கு ஆறு அல்லது ஏழு காட்சிகளும், பண்டிகை காலங்களில் பத்து காட்சிகள் வரை திரையரங்குகளில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here