Sports | விளையாட்டு
வெறும் 5 ரன்னில் பிளே-ஆஃப் வாய்ப்பை கோட்டை விட்ட ஐபிஎல் அணி.. கடும் கோபத்தில் முதலாளிகள்!
2020 ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் முன்னேறி உள்ளன.
இதில் ஹைதராபாத், பெங்களூர் அணிகள் 14 புள்ளிகள் மட்டுமே பெற்று முன்னேறி உள்ளன. 14 புள்ளிகள் பெற்று இருந்தாலும் பெங்களூர் அணியை விட நெட் ரன் ரேட்டில் கொல்கத்தா அணி பின்தங்கி இருந்தது.
கொல்கத்தா அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் நன்றாக அடி உள்ளது. ஆனால் அந்த அணியின் ரசிகர்கள் 5 ரன் கூட கூடுதலாக எடுக்க முடியாத நிலையை சுட்டிக் காட்டி கடுமையாக விளாசி வருகின்றனர்.
கொல்கத்தா அணியின் நெட் ரன் ரேட் -0.214 ஆகும், மாறாக பெங்களூர் அணி தனது ரன் ரேட்டை -0.172 என்ற விகிதத்தில் வைத்துள்ளது.
இதனால் 0.5 என்ற விகிதத்தில் கொல்கத்தா அணி தொடரை இழந்தது வெளியேறியது.
இந்த சிறிய வித்தியாசத்தின் வாய்ப்பை பறிகொடுத்த கொல்கத்தா அணியினர் ரசிகர்கள், என அனைவரும் வருத்தத்தில் உள்ளனர்.

ipl-2020
