Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனது எளிமையால் விஸ்வாசம் குழுவை அதிர செய்த தல…

விஸ்வாசம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஒரு சிறிய அளவிலான ரூமில் அஜித் தங்கி இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அஜித் – சிவா கூட்டணியில் நான்காவதாகத் தயாராகி வரும் படம் விஸ்வாசம். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. அப்பா, மகன் என இரு வேடங்களில் அஜித் நடிக்க இருக்கிறார். படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதன்முறையாக அஜித் படத்தில் இசையமைப்பாளர் இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அவரின் இசையில் பாடல்கள் எல்லாம் சிறப்பாக வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் தம்பி ராமையா, போஸ் வெங்கட், யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்த கூட்டணியில் முன்னதாக வெளியான விவேகம் படம் ரசிகர்களிடம் இருந்து சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால், இவர்கள் கூட்டணியில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தை ஹிட் அடிக்க செய்ய படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறார்கள். தமிழ் சினிமாவின் ஸ்ட்ரைக் காரணமாக, மார்ச் மாதத்திலேயே தொடங்கப்பட இருந்த படப்பிடிப்பு தள்ளி போனது. ஸ்ட்ரைக் முடிந்த பிறகு கடந்த மாதம் ஹைதராபாத்தில் விஸ்வாசம் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்து இருக்கிறது.
இந்நிலையில், அங்கு படப்பிடிப்பில் தங்கி இருந்த அஜித்துக்கு சூப்பர் சூட் ரூம் போடப்பட்டு இருந்தது. முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த 10-ந் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், சில நாட்கள் அதிகமாக தேவைப்பட்டதால், அஜித் தங்கி இருந்த ரூமின் நாட்களை அதிகரிக்க செய்ய ஹோட்டல் நிர்வாகத்திடம் படக்குழு கோரிக்கை வைத்தது. ஆனால், 11-ந் தேதி இரவு முதல் அந்த அறையை பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூருக்கு ஒதுக்கப்பட வேண்டி இருந்தது.
இதனால் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதற்கு நடிகர் அஜித்தும் இன்னொரு நடிகருக்கு நம்மால் இடையூறு ஏற்படக் கூடாது எனத் தெரிவித்து உடனே அறையை காலி செய்தார். சின்ன கட்டிலும், பேனும் கொண்ட சின்ன அறையில் தங்கி இருக்கிறார். இதனால் படக்குழு அவரின் எளிமையை பார்த்து கடும் ஆச்சரியத்தில் ஆழாகி இருக்கின்றனர்.

ajitht
