Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே பாடலில் மொத்தமும் போச்சி! பிரியா வாரியாருக்கு வந்த சோதனை
பிரியா வாரியர் நடிப்பில் வெளியான சிங்கிள் டிராக் அவருக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளிவந்த ஒரு அடார் லவ் படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் வெளிவந்து பெரும் சித்தரித்தது, பாடல் நன்றாக இருந்தாலும் பிரியா வாரியர் கண் அடிப்பது போல் வந்த காட்சி பலரை கவர்ந்தது அதே நேரம் பல மீம்ஸ் கிரியேட்டர்களை உருவாக்கியது.

priya
ஒரு அடார் லவ் படத்திலிருந்து சமீபத்தில் வெளியான ‘பிரீக் பெண்ணே’ பாடல், அதிக டிஸ் லைக்குகளைப் பெற்றுள்ளது. ப்ரியா வாரியர் கொஞ்ச நாட்களாக கொஞ்சம் திமிரோடு இருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தது, அதனால் அவர் மீது ரசிகர்கள் கொஞ்சம் கோபமாகவே இருந்தனர். இது அவர் மீது ஏற்பட்ட பொறாமையாக கூட இருக்கலாம் ஏனென்றால் அவர் அந்த ஒரு பாடலின் மூலம் பெற்ற மிகப்பெரிய வெற்றி.
ஆனால் சமீபத்தில் வெளியான பெண்ணே பாடல் 7 லட்சம் டிஸ்லைக் பெறப் போகிறது மேலும் ஒரு லட்சம் லைக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அந்த வீடியோவை கமெண்ட்டில் கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர். மற்ற மாநிலத்தவர்கள் டிஸ்லைக் செய்துள்ளார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை, கேரளாவை சேர்ந்தவர்கள் நிறைய பேர் டிஸ்லைக் செய்துள்ளனர்.
