துருவ் விக்ரம் – வர்மா

தனக்கு அமைந்தத அறிமுகம் போல் இருந்துவிடக் கூடாது என்று முடிவு செய்துள்ளார் போல் விக்ரம். அதனால் தான் தன் மகனின் அறிமுகப் படத்திற்காக இவ்வளவு மெனக்கெட்டு மார்க்கெட்டிங் செய்கிறார். ஆரம்பம் முதலே தன் மகன் நடிக்கவருவது, அது என்ன படத்தின் ரீ மேக். படத்தின் இயக்குனர், டைட்டில், போஸ்டர் என அனைத்தையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக்கினார்.

வர்மா தி மூவி

மிகவிரைவில் இப்படக்குழு ஷூட்டிங்க்கு செல்லவிருக்கிறது. அதற்கு முன் படத்தோட தலைப்பை அறிவிக்க வேண்டும் என்று இருந்தனர். சென்ற வியாழன் மாலை இப்படத்தின் தலைப்பு வெளிவருவதாக இருந்தது. எனினும் சாமி 2 ஒளிப்பதிவாளர் ப்ரியனின் எதிர்பாராத உயிர் இழப்பால், மரியாதையை நிமித்தமாக விக்ரம் தலைப்பு அறிவிப்பதை தள்ளிவைத்தார். பின்னர் வெள்ளி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் டைட்டில் மற்றும் படத்தின் முதல் லுக் போஸ்டர் போன்ற ஒன்றை வெளியிட்டார் சீனியர் விக்ரம்.

Varma The Movie
அர்ஜுன் ரெட்டி

விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கு சூப்பர் ஹிட் ஆன படம் தான் அர்ஜுன் ரெட்டி. மருத்துவக் கல்லூரியில் நடக்கும் லவ் ஸ்டோரி. காதல்,ரொமான்ஸ், பிரேக்-அப் என்று பல பரிமாணங்களை இந்தப்படத்தில் அழகாக சித்தரித்து இருந்தார் இயக்குனர் சந்தீப் வாங்கா ரெட்டி.இப்படத்தின் தமிழ் ரீ-மேக்கில் ஹீரோவாக நடிக்கப்போவது நம்ப சீயான் விக்ரம் மகன் துருவ், இயக்குனர் பாலா.
எனினும் மற்ற நடிகர், நடிகையர் யார், படக்குழுவில் யார் எல்லாம் உள்ளனர் என்று இன்று வரை சஸ்பென்சாகவே வைத்துள்ளார் விக்ரம்.

தெலுங்குப்பதிப்பில் ஷாலினி பாண்டே நடித்திருந்த நிலையில், தமிழில் ஸ்ரேயா சர்மா நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. எனினும் படத்தில் நாயகியாக நடிப்பது யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை.

வர்மா பட நாயகி யார் ?

இந்த நிலையில், வர்மா பட நாயகி யார் என்கிற சஸ்பென்சை விக்ரம் உடைக்கயிருப்பதாக செய்தி வெளியானது. இதை அவரே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று இரவு கூறியிருந்தார்.

FLASH.NEWS!! Heroine announcement. 12 noon. #varmathemovie

A post shared by Vikram (@the_real_chiyaan) on

இன்று மதியம் 12 மணிக்கு அறிவிப்பு வரும் என்று எதிர்பாராதவர்களுக்கு ஏமாற்றமே காத்து இருந்தது. அந்த வகையில் இன்று வர்மா பட நாயகி யார் என அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 மணி வரை எந்த அறிவிப்பும் இல்லை விக்ரம் தரப்பில் இருந்து.

வீடியோ வெளியிட்ட விக்ரம்

பின்னர் சீயான் விக்ரம் அவர்கள் படத்தின் நாயகி யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை என விக்ரம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வர்மா படத்தின் நாயகி எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லும் விதமாக வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.

அவளை காணவில்லை.
இது நீங்களாக இருந்தால் அல்லது இவளை போல் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் உங்கள் போட்டோ அல்லது விடியோவை இந்த மின் அஞ்சல் முகவரிக்கு [email protected] அனுப்புங்கள்.

“உங்களை மீட் செய்ய ஆர்வமாக உள்ளேன். நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் சீக்கிரம். யார் அவள் ? தேடல் ஆரம்பம்..”

இந்தப்பதிவு தற்பொழுது வைரல் ஆகியுள்ளது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்

அர்ஜுன் ரெட்டி படத்தில் மையக்க கதாப்பாத்திரம் ஹீரோயின் ஷாலினி பாண்டே. இப்பொழுது ஷரியா சர்மா இல்லை என்பது உறுதி ஆகியுள்ள நிலையில் அதில் நடிக்கப் போவது யார் ?