Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரெக்கார்டு அலர்ட்.. தளபதி தாறுமாறு
தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நடிக்கும் “பிகில்”படத்தின் “வெறித்தனம்” சாங் பத்து லட்சம் லைக்குகளை பெற்று அசத்தியுள்ளது.
தளபதி விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு பிகில் படத்துக்காக தனது குரலில் பாடல் ஒன்றை பாடினார். பிகில் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையில் விஜய் முதன்முறையாக பாடுவதால் இந்தப் பாட்டுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எகிரி கிடந்தன.
இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் பக்காவாக பூர்த்தி செய்தது,”வெறித்தனம்”பாடல். பாட்டு வெளியான நாள் முதலே யூட்யூபில் பல சாதனைகளை படைத்து வந்தது. சாதனைகளின் உச்சமாக இதுவரை எந்த ஒரு லிரிக் வீடியோவும் செய்ய முடியாத சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

thalapathy-bigil-verithanam
அதாவது 1000000 லைக்குகளை பெற்று அசத்தியிருக்கிறது. மேலும் 12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது இந்த லிரிக் வீடியோ. இதனை தளபதி ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.
பாசக்கார பய புள்ளைங்க. தளபதியை எப்பவும் மேலேயே வச்சிருக்காங்க.!
