ஹாட்ரிக் வெற்றி பெறுமா சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி.. வெந்து தணிந்தது காடு முழு விமர்சனம்

மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ராதிகா சரத்குமார், சித்தி இத்னானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்காக உடல் எடையை வெகுவாக குறைத்து, கடின உழைப்பை கொடுத்திருக்கும் சிம்பு இப்படத்தின் மூலம் கௌதம் மேனன் உடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். அந்த வகையில் இந்த கூட்டணிக்கு இப்படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்பதை இங்கு விரிவாக காண்போம்.

நன்றாக படித்த கிராமத்து இளைஞனாக இருக்கும் முத்து குடும்ப சூழ்நிலையின் காரணமாக மும்பைக்கு வேலை செய்ய வருகிறார். அங்கு பரோட்டா கடையில் வேலை பார்க்கும் அவரை சுற்றி பல நிகழ்வுகள் நடக்கிறது. தன்னை சுற்றி நடக்கும் பல சம்பவங்களால் முத்து எப்படி முத்து பாய் என்ற கேங்ஸ்டராக மாறுகிறார் என்பது தான் படத்தின் கதை.

Also read:முத்து வீரன் டானாக உருமாறிய வெந்து தணிந்தது காடு.. மிரட்டி விட்ட சிம்பு, ரஹ்மான்

நாயகன், பாட்ஷா, வடசென்னை போன்ற படங்கள் வரிசையில் வெந்து தணிந்தது காடு திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. முத்துவீரன் என்ற இளைஞனாக சிம்பு நடித்திருக்கிறார் என்று சொல்வதைக் காட்டிலும் வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இந்த கதாபாத்திரத்திற்காக அவர் தன்னுடைய அர்ப்பணிப்பை முழுமையாக கொடுத்திருக்கிறார்.

அவருடைய உடை, பேச்சு, தோற்றம் அனைத்தும் முற்றிலும் வித்தியாசமாக காட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஸ்டைல், பஞ்ச் டயலாக் போன்ற சிம்புக்கான அடையாளம் எதுவும் இன்றி கதாபாத்திரமாகவே அவர் மாறி இருக்கிறார். இதற்காகவே அவருக்கு ஒரு பெரிய சல்யூட் வைக்கலாம்.

சிம்புவின் அம்மாவாக ராதிகா சரத்குமார், காதலியாக சித்தி இத்னானி ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையில் மறக்குமா நெஞ்சம் என்ற பாடல் ரசிக்க வைத்துள்ளது. அதேபோன்று காட்சியின் நகர்வுக்கு ஏற்றபடி அமைந்துள்ள பின்னணி இசை அபாரமாக இருக்கிறது.

Also read:GVM-சிம்பு கூட்டணியின் வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அதிலும் இடைவேளை காட்சியில் ரசிகர்களின் கைதட்டலால் தியேட்டரே அதிர்கிறது. அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பகுதி பரபரப்புடனும், ஆர்வத்துடனும் நகர்கிறது. இப்படி படத்தில் பல பிளஸ் இருந்தாலும் சிறு சிறு குறைகளும் இருக்கின்றது.

அதாவது சிம்பு ஒருவரே படத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார். சில காட்சிகள் ரசிகர்கள் யூகிக்கும் படியாகவும் இருக்கின்றது. இதற்கு முன்பு நாம் பார்த்த சில படங்களின் சாயலும் இதில் இருக்கிறது. அதையெல்லாம் சற்று ஒதுக்கி விட்டு பார்த்தால் வெந்து தணிந்தது காடு நிறைவாகவே இருக்கிறது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்த பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருப்பதால் இரண்டாம் பாகம் கேஜிஎப் ஸ்டைலில் இருக்குமா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் இப்படம் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளதை நம்மால் மறுக்க முடியாது.

Also read:வெந்து தணிந்தது காடு, சிம்புக்கு ஒரு லட்சம் பைன் போடு.. சுக்குநூறான ஆடி கார்

சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்