குழந்தை பிறந்த 3வது நாளே ஆக்டிவான வெண்பா.. சிங்கப் பெண்ணே என புகழும் ரசிகர்கள்!

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை அள்ளிக் குவிக்கும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா. இந்த சீரியலுக்கு மக்கள் தரப்பில் அதிக வரவேற்பும் ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமுமே உள்ளது. இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரமே ஹீரோயின் மற்றும் வில்லி கதாபாத்திரம். ஹீரோயினாக நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்த நிலையில் சில காரணங்களால் இவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது இவருக்கு பதில் நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார்.

இதேப்போல் முக்கிய வேடமான வில்லி கதாபாத்திரத்தில் வெண்பாவாக நடிகை பரீனா நடித்து வந்தார். இவர் நிஜவாழ்க்கையில் கர்ப்பமாக இருந்ததால் பிரசவத்திற்காக சீரியலை விட்டு விலகப் போகிறார் என்று பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்தது. ஆனாலும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும்கூட நடிப்பின் மீது பரீனா வைத்திருந்த ஈடுபாட்டினால் அவர் தொடர்ந்து இந்த சீரியலில் நடித்து வந்தார்.

தற்பொழுது கண்டிப்பாக பிரசவத்திற்காக அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று நினைத்த படக்குழுவினர், அவர் சிறையில் இருப்பது போலவும் அவ்வப்போது மட்டும் அவர் தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பி வந்தனர். இவர் சீரியலில் இருந்து விலகாமல் பிரசவத்திற்கு பின் மீண்டும் சீரியலில் தொடரலாம் என்ற நிலையில் இவ்வாறு கதையில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். இப்போ வெண்பா சிறையிலிருந்து மாயாண்டி உதவியோடு கண்ணம்மாவை டார்ச்சல் செய்வததுபோல் காட்சிகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் பரீனாவிற்கு நல்லபடியாக குழந்தை பிறந்து விட்டது. குழந்தை பிறந்து மூன்றே நாளில் மீண்டும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாகி இந்த நற்செய்தியையும் நன்றியையும் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்து வருகிறார் நடிகை பரீனா.

venba-cinemapettai8
venba-cinemapettai

இந்தப் பதிவில் மருத்துவமனையில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு, தனக்கு ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்திருப்பதாகவும், தானும் தனது குட்டி குழந்தையும் நலமாக உள்ளோம். மீண்டும் விரைவில் வந்து விடுவேன் என்று பதிவிட்டு, தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் பரீனா பகிர்ந்துள்ளார்.

எனவே கூடிய விரைவில் மீண்டும் புதுப்பொலிவுடன் மாயாண்டி உடன் இணைந்து இன்னும் கொடூரமான வெண்பாவாக மாறி பல திட்டங்களைத் தீட்டி கண்ணம்மாவிற்கு குடைச்சல் கொடுப்பார் நடிகை பரீனா என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பரீனா சீரியலில் இருந்து விலகாமல் தொடர்ந்து அவரே வில்லி வெண்பாவாக நடிப்பார் என்று மீண்டும் மீண்டும் சோசியல் மீடியாக்களில் உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறார்.