மார்வெல் காமிக்ஸ்

வெனோம் மார்வெலின் படைப்பில் உருவாகியுள்ள அமெரிக்க சூப்பர் ஹீரோ படம். மார்வெல்ஸ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் போல சோனிஸ் மார்வெல் யூனிவெர்சில் உருவாகும் முதல் படம்.

வெனோம் கதாபாத்திரம் நமக்கொன்று புதியதல்ல. முன்பே இந்தக் கதாபாத்திரத்தை திரையில் ‘ஸ்பைடர் மேன் 3’ம் பாகத்தில் பார்த்திருக்கிறோம். எனினும் இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுநீளப் படம் வெளிவருவது இதுவே முதல் முறை. ரூபன் ஃப்லிஷெர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். டாம் ஹார்டி இதில் வெனோம் மற்றும் எடி புரூக் வேடத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

venom
venom

பத்திரிகையாளாரான எடி புரூக்கின் உடலில் வேற்றுகிரக ஜந்து புகுந்துகொள்ள அதன்  சக்தி கிடைக்க பெற்றபின் என்ன நடந்தது என்பதே கதை. ஒரே உடலில் இரண்டு குணாதிசயங்கள் என  அசத்தல் அதிரடியாக இருக்கும் இப்படம். அக்டோபர் 5 பட ரிலீசாகிறது.