venom
மார்வெல் காமிக்ஸ்

சினிமா ரசிகர்களுக்கும் இவன் ஏற்கனவே பழக்கமானவன் தான். ‘ஸ்பைடர் மேன் 3’ம் பாகத்தில் பார்த்திருக்கிறோம். எனினும் இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுப் படம் வெளிவருவது இதுவே முதல் முறை. ரூபன் ஃப்லிஷெர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். டாம் ஹார்டி , மிச்செல் வில்லியம்ஸ் , ரிஸ் அஹமத் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கதை

லைப் பவுண்டேஷன் என்ற ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி வருபவர் கார்ல்டன் ப்ளேக். வெண்வெளியில் இருந்து வேற்றுலக ஸிம்பியாட் எடுத்து வரும் பொழுது இவரது ஸ்பேஸ் ஷிப் விபத்துக்குள்ளாகிறது. அதில் ஒன்று மட்டும் தப்பித்து விடுகிறது.

சிறந்த பத்திரிகையாளர், டிவி நிகழ்ச்சியில் அசத்துபவர் எடி புரூக். முன்னணி வக்கீல் ஆபிசில் வேலை செய்யும் கேர்ள் பிரெண்ட் என்று வாழக்கை ஜாலியாக செல்கிறது நம் ஹீரோவுக்கு. பிளேக்கை பேட்டி காண செல்கிறார், ஏடாகூடமாக கேள்வி கேட்க, வாழக்கை தலைகீழ் ஆகிறது. வேலை போகிறது, கேர்ள் பிரெண்ட் விட்டு சென்று விடுகிறார்.

venom
venom

விரக்தியில் இருக்கும் சமயத்தில் வில்லனின் லேப்பில் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது நம் ஹீரோவுக்கு. அப்பொழுது இவர் உடம்பில் வேனெம் என்ற ஸ்மபயாட் புகுந்து விடுகிறது. அதீத வேகம், அதிக சக்தி, கொடூர பசிக்கு ஆளாகிறார் நம் ஹீரோ. அந்த ஜந்துவை பிடிக்க சீலன் ஆட்கள் வர , ஹீரோ உடம்பில் இருந்தபடி அவர்களை பந்தாடுகிறது வேனாம். எப்படியாவது அதனை தன உடம்பில் இருந்து விரட்ட போராடுகிறார் ஹீரோ.

இந்நிலையில் முன்பு தப்பித்த மற்றோரு ஜந்துவான ரியாட் வில்லன் உடம்பில் புகுகிறது. விண்வெளி கப்பலை அண்டத்தினுல் ஏவி மற்ற ஜந்துக்களை வரவைத்து உலகை அழிக்க திட்டம் எடுக்கிறது.

வேனாம் மற்றும் புரூக்,  ரியாட் சதியை முறியடித்தனாரா அல்லது தொட்டரானாரா என்பதே மீதி கதை.

பிளஸ்

வசனம், இசை, ஸ்டண்ட் காட்சிகள்.

மைனஸ்

சுமாரான வில்லன் , எளிதில் யூகிக்க கூடிய திரைக்கதை

சினிமாபேட்டை அலசல்

காமிக்ஸ் ரசிகர்களுக்கு இக்கதாபாத்திரத்தை திரையில் பார்த்ததுமே திருப்த்தி பெற்றுவிடுவர். எனினும் சாமானிய ரசிகனுக்கும் புரியும் படி விலகியது சூப்பர். ப்ரூக்கிடம் உன் கிரகத்தில் நீ எப்படி சுமாரோ, நான் அப்படி தான் , அதனால் தான் உன்னை புடித்திருக்கிறது வா நாம் சேர்ந்து பயணிப்போம் என்பதெல்லாம் சூப்பர் வசனங்கள்.

venom

சினிமாபேட்டை வெர்டிக்ட்

பிரான்சைஸ் படங்களில் அறிமுகத்திற்கு என்ன தேவையோ , அது அனைத்தும் இப்பார்ட்டில் உள்ளது. மேலும் எண்டு கிரேடிட்ஸ் போடும் பொழுது அடுத்த பார்ட்டில் “கார்னேஜ்” வருவது என்பது நமக்கு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

சினிமாபேட்டை ரேட்டிங்

காமிக் ரசிகர்களுக்கு  : 3.5 / 5
சினிமா ரசிகர்களுக்கு : 2.5 / 5
அதிகம் படித்தவை:  வைரலாகுது 'போகிமான் - டிடெக்டிவ் பிக்காச்சு' ட்ரைலர்.