Connect with us
Cinemapettai

Cinemapettai

saranya-1

Photos | புகைப்படங்கள்

வெண்ணிலா கபடி குழு சரண்யாவா இது? குடும்பம் குட்டின்னு செட்டில் ஆன வைரல் புகைப்படம்

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த கதாநாயகி சரண்யா மோகனின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி உள்ளது.

விஜய், ஷாலினி நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் ‘ஆனந்த குயிலின் பாட்டு’ என்ற பாடலின் இடையே ‘சைலன்ஸ்’ என்று சொல்லி கியூட் பேபி ஆக நடனமாடி, தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சரண்யா மோகன்.

அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தில் பலருக்கும் பரிச்சயமானார். தன்னுடைய கியூட் சிரிப்பாலும் குழந்தைத்தனமான ரியாக்ஷன்களாலும் ரசிகர்களை வசியம் செய்த சரண்யா, கதாநாயகியாக விஷ்ணு விஷாலுடன் வெண்ணிலா கபடி குழு படத்திலும், அதன் தொடர்ச்சியாக ஜெயம் கொண்டான், வேலாயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கலக்கினார்.

Also Read: கைவிட்ட நடிகர்கள், பணம் இல்லாமல் இறந்து போன வெண்ணிலா கபடி குழு நடிகர்.. பப்ளிசிட்டிக்காக இரங்கல் தெரிவித்த கேவலம்

பின்பு அரவிந்த் கிருஷ்ணன் என்ற பல் மருத்துவரை திருமணம் செய்து கொண்ட சரண்யா மோகன், தற்போது குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஆனந்த பத்மநாபன், அன்னபூர்ணா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீப காலமாகவே சரண்யா தன்னுடைய குழந்தைகளுடன் எடுக்கும் க்யூட் வீடியோஸ்க்களையும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் அப்லோட் செய்வதன் மூலம் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறார்.

வெண்ணிலா கபடி குழு சரண்யாவா இது!

saranya-cinemapettai

saranya-cinemapettai

இப்போது CCL 2023 மேட்ச் பார்க்க குடும்பத்துடன் சென்று இருக்கிறார். அங்கு நடிகை சுஜா குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

CCL 2023 மேட்ச் பார்க்க குடும்பத்துடன் சென்ற சுஜா, சரண்யா மோகன்

saranya-family-cinemapettai

saranya-family-cinemapettai

Also Read: ஒரே படத்தில் நடித்து இறந்து போன 3 நடிகர்கள்.. அதிர்ச்சியில் விஷ்ணு விஷால்

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெண்ணிலா கபடி குழு படத்தின் கதாநாயகி சரண்யாவா இது! என ஆச்சரியப்படுகின்றனர். அந்த அளவிற்கு ஆன்ட்டி லுக்கில் இருக்கும் சரண்யா, இனி சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.

Continue Reading
To Top