Venkatesh Bhatt: பிரியங்கா மற்றும் மணிமேகலை பிரச்சனை சமூக வலைத்தளங்களில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையை பற்றி பிரபலங்கள் பலரும் மனம் விட்டு தங்களுடைய கருத்தை பேசி வருகிறார்கள். ஒரு கூட்டம் பிரியங்கா பக்கம் தான் நியாயம் இருக்கிறது என சொல்லி வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் மணிமேகலைக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் இது பற்றி கருத்து தெரிவித்திருந்த செஃப் தாமு மணிமேகலை எனக்கு மகள் மாதிரி, அவளை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்று சொல்லி முடித்து விட்டார்.
இந்த நிகழ்ச்சியின் ஆஸ்தான நடுவராக கடந்த நான்கு சீசன்களாக இருந்தவர் தான் வெங்கடேஷ் பட். இவர் இந்த சீசனில் இருந்து விலகி சன் டிவியில் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இதுவரையிலும் வெங்கடேஷ் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பற்றி எந்த இடத்திலும் கருத்து தெரிவிக்கவில்லை அதேபோன்று விஜய் டிவி பற்றியும் எந்த இடத்திலும் பேசவில்லை.
சூட்சமத்துடன் பதில் சொன்ன வெங்கடேஷ் பட்
அப்படி இருக்கும் பட்சத்தில் முதல்முறையாக மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சினை பற்றி வாயை திறந்து பேசி இருக்கிறார். அதாவது இவர்கள் இருவருக்கும் நடந்திருக்கும் சண்டை என் வீட்டில் யாராவது சண்டை போட்டால் எப்படி இருக்குமோ அதே போன்று தான் எனக்கு இருக்கிறது. இந்த பிரச்சனை தன்னாலேயே அடங்கிவிடும்.
மாகாபா ஆனந்த் சொன்ன மாதிரி இரண்டு யானைகள் சண்டை போட்டால் நாம் குறுக்கே நிற்க கூடாது. அந்த சண்டையை அந்த யானைகளே பார்த்துக் கொள்ளும் என்று வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார். கடந்த நான்கு சீசன்களில் இப்படி ஒரு பிரச்சனை வெங்கடேஷ் பட் இருக்கும்போது வந்ததே கிடையாது.
எத்தனையோ கஷ்டங்களோடு இருப்பவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆக இருந்து வந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியிலேயே இப்படி சண்டை வந்திருப்பது சன் டிவிக்கு தான் கொண்டாட்டமாக இருக்கும்.
- ஆண்டவர் இல்லாத பிக்பாஸ் 8, துண்டு போட்ட பிரியங்கா
- அட்ட மாதிரி இங்கேயே ஒட்டிக்கிட்டு இருந்தா தான் சோறு
- மணிமேகலைக்கு ஆதரவாக போர் கொடியை தூக்கிய 5 பிரபலங்கள்