Tamil Cinema News | சினிமா செய்திகள்
எல்லாம் பேசிட்டு இருக்கும்போதே OTT-ல் ரிலீஸ் படத்தை செய்த வெங்கட் பிரபு.. தலக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
வெங்கட் பிரபு துணை நடிகராக இருந்து பின்னர் இயக்குனராக மாறியவர். இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும். இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவ்வப்போது சில படங்களை தயாரித்து வருகிறார்.
சென்னை 28 படத்தில் நடித்த நடிகர்களை தனித்தனி ஹீரோவாக வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் உடன் இணை தயாரிப்பாளராக சில படங்கள் தயாரித்துள்ளார். அந்த வகையில் வெங்கட் பிரபு தயாரிப்பில் வைபவ் மற்றும் சனா அல்தாப் நடிப்பில் அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவானது ஆர்கே நகர் (RK nagar).
இந்த படம் ஆர் கே நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலை மையமாக வைத்து உருவானது. நக்கல் நையாண்டி என படம் முழுக்க கலகலப்பாக இருக்கும் இந்தப் படம் சில மாதங்களுக்கு முன்பே OTTயில் வெளியானது.
சிறிய பட்ஜெட் படமான ஆர்கேநகர் படத்தை அப்போது தியேட்டர்காரர்கள் படத்தை வாங்காமல் வெங்கட்பிரபுவை சோதித்து விட்டனர். அதன் காரணமாக அப்போதே ஆர்கே நகர் படத்தை OTT இல் வெளியிட்டார். ஆனால் அதன்பிறகு தியேட்டர்காரர்கள் வம்பு பண்ண உடனடியாக படத்தை தூக்கி விட்டார்கள்.
தற்போது தியேட்டர்காரர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையில் மிகப்பெரிய போரே நடந்து வருகிறது என்று சொல்லலாம். சிறிய பட்ஜெட் படங்களை OTTயில் விற்பதால் தியேட்டர்கள் அழிந்துவிடும் என அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட பல பிரச்சனைகள் எழுந்தது. இந்நிலையில் யாரோ என்னமோ பேசிட்டு போங்க என தைரியமாக தனது ஆர்கே நகர் படத்தை மறுபடியும் OTTயில் ரிலீஸ் செய்துள்ளார் வெங்கட் பிரபு. இதனால் மாநாடு படத்திற்கு ஏதேனும் இடையூறு வருமா என கலக்கத்தில் தயாரிப்பாளர்.
