தமிழ் திரைப்படத்துறையில் வெங்கட் பிரபு முன்னணி இயக்குனர் ஆவார் வெங்கட் பிரபு என்றாலே மிகவும் ஜாலியான மனிதர் என்று தான் எல்லோரும் கூறுவார்கள். அவர் என்ன தான் ஜாலியாக இருந்தாலும் படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் செம்ம சீரியஸ் தான்.ஆனால் இவர் படங்கள் அனைத்தும் ஜாலியாகதான் போகும்.

அதனால் தான் அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் அவர் பணியாற்றியுள்ளார், இவர் தற்போது இயக்கி வரும் படம் பார்ட்டி. இப்படத்தில் இவருடைய நண்பர்கள் கேங் தான் நடித்து வருகின்றது,

இந்நிலையில் நேற்று நடிகர் ஜெய் மற்றும் ப்ரேம்ஜி குடித்துவிட்டு காரை ஒரு பாலத்தில் மோதியுள்ளனர்.இதனால் தமிழக காவல்த்துறையே ஜெய்யின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இதுக்குறித்து வெங்கட் பிரபுவிடம் டுவிட்டரில் கேட்டால் ‘ஓஹோ அதற்குள் பார்ட்டி படத்தின் ப்ரோமோஷன் தொடங்கிவிட்டார்களா?’ என்று கூலாக பதில் அளித்துள்ளார்.