Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் பட இயக்குனர் சிவாவிடம் வேண்டுகோள் வைத்த வெங்கட் பிரபு !
வெங்கட் பிரபு
கோலிவுட்டில் உள்ள ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவர். தல அஜித்துடன் இவரின் நட்பு பற்றி அனைவரும் அறிந்ததே. தல அஜித்தை வைத்து டார்க் ஜானர் கலந்து “மங்காத்தா” என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்தவர். எந்த பேட்டி என்றால் கண்டிப்பாக இவரிடம் கேட்கப்படும் கேள்வி மங்காத்தா பார்ட் 2 வருமா என்பது தான்.
விசுவாசம்
தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா இணையும் நான்காவது படம் விசுவாசம். படத்தை பற்றிய பல தகவல்கள் கிசு கிசுக்கப்பட்டாலும், சில நாட்களாகவே எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.
அஜித்தின் பிறந்தநாள்
உழைப்பாளர்கள் தினமான மே 1-ஆம் தேதி தான் அஜித்தின் பிறந்தநாள். இயக்குனர் வெங்கட் பிரபு தன் ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்தை கூறிவிட்டு, கூடவே வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார்.
“டைரக்டர் சிவா சார், பின்னி பெடல் எடுங்க. அஜித் ரசிகர்கள் என்ற முறையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளோம். நாங்க பெருமை படம் படி படம் எடுங்க.” என்று கூறியுள்ளார்.
