பிரிந்த வெங்கட் பிரபு, யுவன் கூட்டணி.. இவர்தான் அந்த சகுனி வேல பார்த்ததா?

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்தில் யுவன் சங்கர் ராஜா இடம்பெறாதது பலருக்கும் ஆச்சரியமான விஷயம் தான். சரி அவருக்கு பதில் வேறு யார்தான் இசை எனப் பார்த்தால் அது வெங்கட் பிரபுவின் தம்பி நடிகர் பிரேம்ஜி தான். அப்படி என்னதான் பிரச்சினை இருக்கும் என ஒரு அலசல்.

சென்னை 28, கோவா, மங்காத்தா, பிரியாணி, என வெங்கட் பிரபுவின் மாநாடு வரை அனைத்து படங்களுக்கும் ஒரே இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான். தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கும் மன்மத லீலை படத்திலும், பார்ட்டி படத்திலும் யுவன் சங்கர் ராஜா இசை இல்லை. அவருக்கு பதிலாக பிரேம்ஜி இசையமைக்கிறார்.

மாநாடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ் ஜே சூர்யா அவர்கள் மங்காத்தா படத்தில் கூட காப்பி பேஸ்ட் பண்ணி இருக்காரு மாநாடு படத்தில் நன்றாக இசையமைத்திருக்கிறார் என்று விளையாட்டாக கூறுவார். ஆனால் அதனை பல ரசிகர்கள் சீரியஸ் செய்தியாகத்தான் நினைகிறார்கள். யுவன் சங்கர் ராஜாவின் இசை முன்னாடி இருந்ததுபோல் இல்லை எனவும் ஒரு பக்கம் செய்திகள் உலாவுகிறது.

அதற்கு தகுந்தார்போல் வலிமை படத்திலும் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை சரியில்லை என்று ஜிப்ரான்க்கு பின்னணி இசையை கொடுக்கும்படி H.வினோத் கேட்டதாக செய்திகள் வந்தது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பிரேம்ஜி அடிக்கடி வாய்ப்பு கேட்க சரி என பிரேம்ஜியை இசையில் அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல முயற்சி செய்கிறாராம் வெங்கட் பிரபு.

ஒருவேளை வெங்கட் பிரபு, பிரேம்ஜி காம்போ நன்றாக வேலை செய்தால் கண்டிப்பாக இனி வரும் படங்களுக்கு பிரேம்ஜிக்கு இசை அமைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முயற்சியே இனி வரப்போகும் வெங்கட் பிரபுவின் அடுத்து இரண்டு படங்களும்.

கடைசியில் யுவன் சங்கர் ராஜாவின் நிலைமை இப்படி ஆகும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை அனைவரும் சொல்வது போல் அவர் இசையமைக்கும் படங்களில் ஒரு சில பாட்டுகள மட்டுமே பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றன. அதனை சரிசெய்து கண்டிப்பாக மீண்டும் யுவன் வரவேண்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்