Sports | விளையாட்டு
சிஎஸ்கேவின் தோல்விக்கு பின் வெங்கட் பிரபு போட்ட ட்வீட்! அட இவர் சொல்வதெல்லாம் உண்மை
இந்த ஐபிஎல் புதிய சீசனில் சென்னை சொதப்பல் கிங்ஸ் என பெயர் வாங்கி வருகின்றனர். கையில் ஈஸியாக ஜெயிக்க வேண்டிய மேட்சை விட்டு விட்டு தடுமாறி வருகின்றனர். 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில உள்ளனர்.

ipl points table
டாடிஸ் டீம் என அனைவரும் கிண்டல் செய்தாலும், வெற்றிகளை தட்டி செல்வதில் வல்லவர்களாக இருந்தவர்கள். ஆனால் அந்தோ பரிதாபம் என சொல்லும் சூழல் தான் வந்துள்ளது.
தொடர் தோல்விகளுக்கு பின் நேற்று தோனி, இந்த சீசன் நாங்கள் அந்த அளவுக்கு தகுதியான டீமாக இல்லை என சொன்னது நிதர்சனமான உண்மை தான். மேலும் இளம் வீரர்களிடம் நாங்கள் அந்தளவுக்கு உத்வேகத்தை பார்க்கவில்லை. அடுத்த போட்டிகளில் அவர்களை ஆட வைப்போம், அவர்களும் அழுத்தம் ஏதும் இன்றி விளையாட முடியும்.” என சொல்லி முடித்தார்.
இந்நிலையில் பிரபல இயக்குனரும், சென்னை டீமின் விசுவாசியுமான வெங்கட் பிரபு மனவருத்தத்துடன் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

venkat prabhu tweet
இப்படி தானே சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடி சமயங்களில் மத்த டீம்களின் ரசிகர்கள் உணரவு இருந்திருக்கும் எனவும் சுரேஷ் ரைனாவை அதிகம் மிஸ் செய்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
