GOAT: நடிகர் விஜயின் புகைப்படம் இன்னும் சில நாட்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய் ரசிகர்கள் இந்த கொண்டாட்டத்திற்காக ஒரு வருடமாக காத்துக் கிடக்கிறார்கள். பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்திருக்கிறது.
கோட் படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை தான் பெற்றது. அதேபோன்றுதான் இந்த படத்தின் நான்கு சிங்கிள் பாடல்கள் வெளியாகி எதுவுமே ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பது சமூக வலைத்தளத்தில் நெகட்டிவ் விமர்சனமாக எடுத்து வைக்கப்பட்டு இருக்கிறது.
எது எப்படி போனாலும் கோட் படம் தொழில்நுட்ப அளவில் தமிழ் சினிமாவை இன்னும் ஒரு படி முன்னேற வைக்கும் என வெங்கட் பிரபு அடித்து சொல்லியிருக்கிறார். அவர் அது மட்டும் சொன்னால் பரவாயில்லை, பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு படத்தின் முழு கதையையுமே சொல்லியதுதான் விஜய் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
வெங்கட்பிரபு ஜகஜால கில்லாடியா இருப்பாரு போலயே!
வெங்கட் பிரபு ஒரு பக்கம் இப்படி செய்ய பிரேம்ஜி இன்னொரு பக்கம் சிறப்பான சம்பவத்தை செய்து விட்டார். அதாவது பிரேம்ஜிக்கு அந்த படத்தில் என்ன கேரக்டர், படத்தின் முதல் 60 செகண்ட் எப்படி இருக்கும், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் இப்போ வெளியே வந்தது கிடையாது.
தியேட்டரில் பார்க்கும் பொழுது அந்தப் பாடல் வேற மாதிரி இருக்கும் என இஷ்டத்திற்கு எல்லா சஸ்பென்சையும் உடைத்து விட்டார், அது மட்டும் இல்லை படத்தில் ஐந்து கேமியோ ரோல்கள் இருப்பதாகவும், சிவகார்த்திகேயன் மற்றும் தோணி எல்லாம் நடித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இது என்னடா படத்தோட எல்லா விஷயத்தையும் ரிலீசுக்கு முன்னாடியே சொல்லிட்டு இருக்கீங்க, அப்ப படத்துல நாங்க போய் என்னதான் பார்க்கிறது என எல்லோருக்குமே ஒரு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனால் உண்மையில் இது எல்லாம் வெங்கட் பிரபுவின் தந்திரம் தானாம்.
பட ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் தம்பியை இஷ்டத்திற்கு பேட்டி கொடுக்க வைத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்து விட்டார். பிரேம்ஜி சொன்னதெல்லாம் கண்டிப்பா படத்துல இருக்குமா என்று பார்ப்பதற்காகவே படத்தின் மீதான ஆர்வம் எல்லோருக்கும் அதிகரித்துவிட்டது.
சஸ்பென்சை உடைக்காமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எதிர வைப்பது ஒரு ரகம். எல்லாத்தையும் சொல்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருப்பது தான் வெங்கட் பிரபுவின் புதிய பாணியாக இருக்கிறது.
போதாத குறைக்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுக்கும் பேட்டிகளில் எல்லாம் தயவு செய்து படத்திற்கு ஹைப் ஏத்தாதீங்க என்று சொல்வது, விஜய் ரசிகர்களுக்கு வயிற்றில் புளியை கரைப்பது போல் தான் இருக்கிறது.
மாஸ் காட்டும் விஜய்யின் கோட்
- கோட் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
- ஐயோ கோட் மொத்த சஸ்பென்சும் உடைஞ்சு போச்சே
- கங்குவாவுக்கு முன்பே ரேஸிலிருந்து விலகிய கோட்