Connect with us

Cinemapettai

மாநாடு படத்தில் நடிக்கப்போவது தனுஷா ? வெங்கட் பிரபுவின் ட்வீட் அப்படி தாங்க சொல்லுது

Cinema News | சினிமா செய்திகள்

மாநாடு படத்தில் நடிக்கப்போவது தனுஷா ? வெங்கட் பிரபுவின் ட்வீட் அப்படி தாங்க சொல்லுது

சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் அறிவிக்கப்பட்ட படம் மாநாடு. மேலும் இப்படத்தின் கதை அரசியல் சார்ந்ததாக, ரொமான்ஸ், பைட்ஸ் அனைத்தும் கலந்த கலவையாக அமைக்கப்பட்டு இருக்கிறது என்று முன்பே இயக்குனர் வெங்கட் பிரபு கூறினார். சுரேஷ் காமாட்சி மற்றும் சுப்பு பஞ்சு இணைந்து தயாரிப்பதாக இருந்த இப்படம் சிம்புவின் பிறந்தநாளன்று துவங்க வேண்டியது. எனினும் பல மாதங்களாக தள்ளி போனது.

சென்ற மாதம் இப்படம் ட்ராப் ஆகிவிட்டது என வதந்திகள் பரவ ஆரம்பித்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டீவீட்டும் தட்டினார். மேலும் சிம்பு வெளிநாட்டில் இப்படத்திற்கு தான் உடம்பை குறைக்கிறார், பயிற்சி எடுக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் மாநாடு படம் தொடர முடியாமல் போனதற்கு வருத்தப்பட்டு வெங்கட் பிரபு ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், என் பிரதர் சிம்புவுடன் வேலை செய்ய முடியவில்லை. தயாரிப்பாளாரின் நிதி பிரச்சனையினால் எடுத்த முடிவை மதிக்கறேன் என கூறினார்.

இதனால் சிம்பு ரசிகர்கள் சற்றே சோகமாகினர். உடனே சிம்பு ‘மகா மாநாடு’ என்ற படத்தை ஆரம்பிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வந்தது. 125 கோடி பட்ஜெட் என்றும், 5 மொழிகளில் வெளியாகும், இப்படத்தை சிம்பு மற்றும் டி.ராஜேந்திரன் இருவரும் சேர்ந்து எடுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வெங்கட் பிரபு, சுதந்திர தினத்தன்று தட்டிய ட்வீட் தான் பலரின் கவனத்தை பெற்றது. மனிதர் வார்த்தைகளில் விளையாடி உள்ளார்.

வம்பை (சிம்பு) வளர்க்காமல், அன்பை (வடசென்னை தனுஷ்) வளர்ப்போம் என்பதே அது.

ஆகமொத்தத்தில் சிம்புவிற்கு ஆதரவாக இருக்கும், ஒரு சிலரும் அவரை விட்டு விலகும் சூழல் தான் நடந்து வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top