fbpx
Connect with us

Cinemapettai

தல vs தளபதி! ஒப்பீடு வேண்டாமே.. வெங்கட் பிரபுவின் நேர்மையான ட்விட்டர் பதிவு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல vs தளபதி! ஒப்பீடு வேண்டாமே.. வெங்கட் பிரபுவின் நேர்மையான ட்விட்டர் பதிவு

சமூகவலைத்தளங்களில் நம்ம தமிழகத்தில் அடிக்கடி பரவலாக ட்ரெண்டிங் இருப்பது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் ஹாஷ்டாக் தான். தங்கள் ஹீரோவாக பாராட்டி, புகழ்ந்து, பாசிட்டிவாக ட்ரெண்ட் செய்வது ஒருவகை, அது நம் அனைவருக்குமே ஓகே தான். ஆனால் மற்றவரை தாழ்த்தி, தரக்குறைவாக பேசி ட்ரெண்ட் செய்வது சற்றே வருத்தம் தான். பல ட்ரெண்டிங்க் விஷயத்தில் கமெண்ட் கூட படிக்க முடியாதபடி கேவலமான வார்த்தைகளில் தான் உள்ளது.

இந்நிலையில் பிரபல இணையதளத்தின் ட்விட்டர் பக்கத்தில் தல அஜித்தின் மங்காத்தா மற்றும் தளபதி விஜயின் கத்தி; இந்த இரண்டில் எது சிறந்த தீம் இசை என வோட்டிங் நடத்தினர். இதற்கு தான் வெங்கட் பிரபு பதில் தட்டியுள்ளார்.

“தீம் இசை அந்தந்த படத்திற்கு ஏற்ற மாதிரி உருவாக்கப்படும் ஒன்று. இரண்டுமே அதன் ஸ்டைலில் சூப்பர் தான். தயவு செய்து ஒப்பிடாதீர்கள். ஏற்கனவே தாறுமாறா போய்கிட்டு இருக்கு, இதுல இது எதுக்கு ? இசையை கொண்டாடுவோம்.” என நாசுக்காய் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top