Reviews | விமர்சனங்கள்
வெங்கட் பிரபுவின் வேற லெவல் விளையாட்டு.. மன்மத லீலை விமர்சனம்
வெங்கட் பிரபு ஜாலி ஆசாமி என்பது நாம் அறிந்ததே. அவர் இயக்கத்தில் பிரேம்ஜி இசை அமைப்பில் வெளியாகி உள்ள படம் மன்மத லீலை. கமலின் மன்மத லீலை ட்ரென்ட் செட்டர் சினிமா, அந்த தலைப்பை எடுத்து நம் அசோக் செல்வனை பிளேபாயாக மாற்றி கூடவே சம்யுக்தா ஹெகடே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் என மூன்று நாயகிகளுடன் வெளியாகி உள்ள அஜால் குஜால் சினிமா.
இப்படத்தில் அடல்ட் சமாச்சாரம், காமெடி, ரொமான்ஸ், திரில்லர் என பல ஜானர்களை இணைத்துள்ளார் வெங்கட். இப்படத்திற்கான கதையை மணிவண்ணன் எழுதியுள்ளார், ராக் போர்ட் என்டேர்டைன்மெண்ட் தயாரித்துள்ளனர். 2010 பிளாஷ் பேக் மற்றும் தற்பொழுது நடப்பது என இரண்டையும் கலந்து காட்டும் ஸ்டைலில் திரைக்கதை. அன்று முரட்டு பிளே பாயாக அசோக் செல்வன், இன்று பொறுப்பான குடும்ப தலைவன் தான் எனினும் இன்றும் லீலைகளை நடத்தி தான் வருகிறார்.
2010 ல் இணையத்தில் பழக்கமான பெண் வீட்டிற்கு செல்கிறார், அங்கு சென்ற பின்பு தான் பாய் பிரெண்ட் அல்ல கள்ள காதலன் என தெரியவருகிறது. 2020 ல் மனைவி மற்றும் மகள் ஊருக்கு செல்ல வழி மாறி வந்தவருடன் உல்லாசமாக இருக்கிறார்.
எனினும் இன்று நடந்ததும், அன்று நடந்ததும் தொடர்ச்சியுடைது என தெரியவர அசோக் செல்வனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஷாக் தான். இது என்னடா இப்படி ஒரு ட்விஸ்ட் என யோசிக்கும் சமயத்தில் படம் திரில்லர் சினிமா போன்ற ரூட் எடுக்கிறது. இறுதியில் அசோக் செல்வன் எப்பேர்ப்பட்ட அஜால் குஜால் பார்ட்டி என்பது நமக்கு புரிகிறது.
இருட்டு அறையில் முரட்டு குத்து ஸ்டைலில் அடல்ட் ஜானர் சினிமா என எதிர்பார்த்து செல்பவர்களுக்கு ஏமாற்றம் தான் இந்த சினிமா. பேமிலி ஆடியன்ஸுக்கு ஸ்ட்ரிக்ட்ல்லி நோ தான். குடிப்பது, முத்தக்காட்சி, பெட் ரூம் காட்சிகள், வசனம் என பல 18 + விஷயங்கள் உள்ளது.
பெரிதாக லாஜிக் யோசிக்காமல் நேரத்தை போக்க ஓகேவான படம். திரையரங்க ரிலீஸை தவிர்த்து நேரடி ஓடிடி ரிலீஸ் செய்திருக்கும் பட்சத்தில் செம்ம ஹிட் அடித்திருக்கும் இந்த மன்மதலீலை.
சினிமாபேட்டை ரேட்டிங் 2.5 / 5
