வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி வரும் `பார்ட்டி’ படத்தின் கதாபாத்திரங்களை பற்றிய டீசெர் பார்ட் 1 ஒன்றை வெங்கட் பிரபு கிறிஸ்துமஸ் ஸ்பெசலாக வெளியிட்டுள்ளார்.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன்,ஷியாம், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரேம்ஜி இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், `பார்ட்டி’ படத்தின் டீசர் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


இந்நிலையில் இன்று வெங்கட் பிரபு தன் ட்விட்டரில் இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் காட்சி அமைப்பு எப்படி இருக்கும் என்பதை விளக்கும் விதமாக ‘பார்ட்டி அனிமேல்ஸ் – கேங்க் பார்ட் – 1’ என்று டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை நம் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.