வெங்கட் பிரபு இயக்கத்தில் களமிறங்கும் சூப்பர்ஸ்டார்?

சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

venkat-prabhu

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு, காதல் அழிவதில்லை படத்தின் மூலம் நடிகராக கால் பதித்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். இவரின் ஸ்டைலில் சொக்கிய ரசிகர்கள் இவருக்கு லிட்டில் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கினர். ஆக்‌ஷன் என்றாலும் லவ் பாய் லுக் என்றாலும் சிம்பு ஒரு கலக்கு கலக்கி விடுவார் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆனால் திறமை இருக்கும் அளவுக்கு சிம்புவின் மீது கதையில் தலையிடுவார், படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் என கோலிவுட்டில் பல புகார்களும் இருக்கிறது. சமீபத்தில் வெளியான அன்பானவன், அசராவதவன், அடங்காதவன் பட விவகாரம் தயாரிப்பாளர் சங்கம் வரை சென்றது. இதனால் சிம்பு இனி அவ்வளவு தான் என ஒரு பேச்சு நிலவியது. இருந்தும் சக்கப் போடு போடு ராஜா படத்தில் இசையமைப்பாளராக களமிறங்கினார்.

தொடர்ந்து, அவருக்கு மணிரத்னம் தன் செக்க சிவந்த வானம் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுத்தார். அப்படப்பிடிப்புகளில் சிம்பு தான் முதல் ஆளாக கலந்து கொண்டார். இத்தகவலை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் முதல் அரவிந்த் சாமி வரை உறுதிப்படுத்தினர். இதனால் அவருக்கு சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது. செக்கச்சிவந்த வானம் படத்துக்குப் பின்னர் அவர் கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். அதற்கு அடுத்ததாக, ஒரு படத்தை இயக்க சிம்பு முடிவெடுத்திருக்கிறார்.

இந்த இரு படங்களையும் முடித்த பின்னர், சிம்புவின் மெகா ஹிட் லவ் ஸ்டோரியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். அதை தொடர்ந்து, தாணுவின் வி புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாகவும் சிம்பு ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் எல்லாம் நடிக்க தொடங்கும் முன்னர், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மிக மிக அவசரம் படத்தை தயாரித்து, இயக்கிய சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல சர்ச்சைக்களுக்கு பிறகும் சிம்பு பழைய பார்மிற்கு திரும்பி இருப்பதால் ரசிகர்கள் செம குஷி மூடிற்கு சென்றுள்ளனர்.