Connect with us

Cinemapettai

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.. ஹீரோ, ஹீரோயின்கள் யார் தெரியுமா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.. ஹீரோ, ஹீரோயின்கள் யார் தெரியுமா

வெங்கட் பிரபு அவர்களை பாடகர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அடுக்கிக்கொண்டே போகலாம். எனினும் நம் கோலிவுட் ரசிகர்களுக்கு இயக்குனர் வெங்கட்டை தான் அதிகம் பிடிக்கிறது. சென்னை 28 , சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காத ட்ரீட்.

வெங்கட் பிரபு-  சிம்பு கூட்டணியில் மாநாடு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடக்கிறது . அதே போல இவரது பார்ட்டி படமும் முழுதும் முடிந்து விட்டது, ஆனாலும் ரிலீஸ் ஆகவில்லை. இவர் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு சமீபத்தில் ட்விட்டரில் வெளியானது.

முருகானந்தத்தின் ராக்போர்ட் நிறுவனம் மற்றும் வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி இணைந்து தயாரிக்கும் படம். விரைவில் மற்ற அப்டேட்ஸ் என பகிர்ந்துள்ளனர்.

venkat prabhu s next

எனினும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை கரோனா முதல் அலை ஊரடங்கின்போதே வெங்கட் பிரபு ஆரம்பித்துவிட்டார் என சிலர் சொல்கிறார்கள். மேலும் ஹீரோ அசோக் செல்வனுடன் மூன்று ஹீரோயின்கள் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் நடித்துள்ளனராம் . இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்கவுள்ளார் என்றும் சொல்கிறார்கள். காத்திருப்போம் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top