மோசமான வில்லனிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வெங்கட் பிரபு.. ராஜமவுலி பார்த்து மிரண்ட நடிகர்

raja mouli venkat prabhu
raja mouli venkat prabhu

Venkat Prabhu: விஜய் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. இதில் ஒரு சில படங்கள் சுமாராக இருந்தாலும் வசூல் அளவில் நஷ்டம் அடையாத அளவிற்கு தற்போதைய படங்கள் வெற்றி பெற்று விடுகிறது. அதனாலேயே வசூலின் ஆட்ட நாயகன் என்ற முத்திரை குத்தப்பட்டு விட்டது. அத்துடன் ஒரு வருடத்திற்கு குறைந்தது இரண்டு படங்களை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி விடுகிறார்.

அப்படிப்பட்ட இவர் லியோ படத்திற்கு பிறகு இவருடைய 68வது படமான “GOAT” படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். எப்பொழுதுமே விஜய் படத்துக்கு ஏதாவது ஒரு வகையில் சர்ச்சை பூகம்பமாக வெடித்து விடும். அதிலும் தற்போது விஜய்யின் பட டைட்டில் அனைத்தும் ஆங்கில வார்த்தையை மையப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் டைட்டிலையும் அப்படியே வைத்திருக்கிறார்.

தற்போது அரசியலுக்கு வரும் நேரத்தில் இந்த மாதிரியான டைட்டிலை வைத்து மக்களிடமிருந்து ஒரு சில எதிர்மறையான கருத்துக்களை பெற்று வருகிறார். இருந்தாலும் இதெல்லாம் எப்படி சமாளிக்க வேண்டும் என்பது எனக்கு கைவந்த கலை என்பதற்கு ஏற்ப விஜய் அசால்டாக விட்டுவிட்டார். இதனை தொடர்ந்து இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி கமிட்டாகி இருக்கிறார்.

Also read: 3 ஹீரோக்கு பின்னணி பாடல் பாடிய விஜய்.. 23 வருடத்திற்கு முன் சூர்யாவிற்கு கை கொடுத்த தளபதி

மேலும் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா போன்ற பல பிரபலங்கள் இதில் இணைந்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு இப்பொழுது இன்னும் இரண்டு நடிகர்கள் கமிட்டாகி இருக்கிறார்கள். அதில் கஞ்சா கருப்பு புக் ஆகியிருக்கிறார். தற்பொழுது புது புது காமெடி நடிகர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு கஞ்சா கருப்பு நடிகரை ஏன் தேடிப்பிடித்து போட்டு இருக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

அடுத்ததாக இன்னொரு நடிகரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவரை முக்கால்வாசி மோசமான வில்லன் கேரக்டரில் அதிகமான படங்களில் பார்த்திருப்போம். அந்த அளவுக்கு வில்லன் கேரக்டரில் மற்றவர்களை மிரட்டி இருப்பார். இவருடைய வில்லத்தனத்தை இயக்குனர் ராஜமௌலியை பார்த்து மிரண்டு இருப்பார். அந்த அளவிற்கு ஈ படத்தில் இவருடைய நடிப்பு பிரமாதமாக அமைந்திருக்கும்.

அந்த மோசமான வில்லன் யாரும் இல்லை கிச்சா சுதீப். இவர் தளபதி 68 படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற காரணத்திற்காக வெங்கட் பிரபு இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பையும் சேர்ந்து நாம் பார்க்கலாம். இப்படி பல நடிகர்களின் பட்டாளத்தை நம் முன்னே கொண்டு வர நினைக்கும் வெங்கட் பிரபுவுக்கு இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Also read: அரசியல், சினிமா என இருதலைக்கொல்லியாய் மாறிய விஜய்.. அவரை பார்த்து பயந்து தான் கன்ஃபார்ம் ஆன தளபதி-69

Advertisement Amazon Prime Banner