venkat-prabhu

சென்னை 28, மங்காத்தா உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது ‘பார்ட்டி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பிளாக் டிக்கெட் கம்பெனி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, வெங்கட்பிரபு இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘சென்னை 28-2’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

venkat-prabhu

அதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் முன்வந்தது. இதற்காக கதை மற்றும் திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார் வெங்கட்பிரபு.

அதிகம் படித்தவை:  வெளியானது வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' டீஸர்- கேங்க் பார்ட் 1 !

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் தயாரிக்கும் படமான ‘RK .நகர்’ படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

Venkatprabhu
Venkatprabhu

இந்த நிலையில் ‘RK .நகர்’ படத்தின் டீசர் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளரும், வெங்கட்பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி தனது சமூகவலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  சென்னை 28 II இன்னிங்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Venkat-Prabhu

வைபவ், சனா, சம்பத் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை சரவணன் ராஜன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த ‘வடகறி’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவும், பிரவீண் கே.எல் படத்தொகுப்பும், விதேஷ் கலை இயக்கமும், வாசுகி பாஸ்கர் காஸ்ட்யூம் டிசைனும் செய்து வருகின்றனர்.