Connect with us
Cinemapettai

Cinemapettai

Hotstar-Specials-Live-Telecast

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காஞ்சனா-2 படத்தை அட்ட காப்பியடித்த வெங்கட் பிரபு.. LIVE TELECAST வெப்சீரிஸ் ட்ரெய்லரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சமீபகாலமாக வெப்சீரிஸ் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. பாவ கதைகளை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் டெலிகாஸ்ட் எனும் பெயரில் ஒரு வெப் சீரிஸ் இயக்கியுள்ளனர்.

இந்த வெப் சீரியஸில் காஜல் அகர்வால் மற்றும் வைபவ், கயல் ஆனந்தி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸ் முழுக்க முழுக்க பேய் மையமாக வைத்து கதை கருவை உருவாக்கி உள்ளனர்.

தற்போது இந்த வெப் சீரிஸ் இன் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் ஓரளவு வரவேற்பு பெற்று வரும் நிலையில் ஒருசில ரசிகர்கள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளை பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.

ராகவா லாரன்ஸ் இயக்கி பிரமாண்டமான வெற்றி பெற்ற காஞ்சனா 2 திரைப்படத்தில் லைவ் டெலிகாஸ்ட் மூலம் பொய்யான ஒரு நபரை பேயாக காண்பித்து பின்பு உண்மையாகவே லைவ் டெலிகாஸ்ட்ல் பேய் காண்பித்தனர்.

தற்போது அதே பட காட்சிகளை அப்படியே வைத்து இந்த வெப் சீரிஸ் இசை உருவாகியுள்ளதாகவும், ராகவா லாரன்ஸ் பயன்படுத்திய வித்தையை தான் வெங்கட் பிரபுவும் பயன்படுத்துவதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் ரசிகர் சொன்னது போல் காஞ்சனா-2 படத்தில் இடம்பெற்ற வசனம் மட்டும் காட்சியும் அப்படியே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top