ரொம்ப நாளா ஒரே மாதிரி நடிக்கும் விஜய்.. அவர வேற மாதிரி மாத்த ஆசைப்படும் வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற படம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. மேலும் அனிருத் மூன்றாவது முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 66, 67 போன்ற படங்கள் பற்றிய செய்திகள் தினமும் ஒவ்வொன்றாக இணையத்தில் கசிந்து கொண்டிருக்கிறதே தவிர அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவுமே வெளிவந்த பாடில்லை.

இந்நிலையில் வெங்கட்பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் நீண்ட நாட்களாக ஒரே மாதிரியான படங்கள் செய்து வருவதாகவும் அவருக்கு வேறு மாதிரியான படம் செய்ய ஆசைப் படுவதாகவும் தெரிவித்துள்ளது விஜய் ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளது.

வெங்கட் பிரபு தயாரிப்பில் சோனி லீவ் என்ற ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியான திரைப்படம் கசடதபற. சிம்புதேவன் இயக்கிய இந்த படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்புகளும் பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன. இந்த படத்தில் வெங்கட்பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனராக பெரிய அளவு கொண்டாடப்படவில்லை என்றாலும் நடிகராக அவரை மிஸ் செய்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.

இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லி சிரித்த வெங்கட்பிரபு, அதே பேட்டியில் விஜய்க்கு எந்த மாதிரி படம் செய்ய வேண்டும்? என்று கேட்டதற்கு ஒரு பதில் கொடுத்தார். அதாவது, கடந்த சில வருடங்களாகவே விஜய் ஒரே மாதிரி சீரியசான படங்கள் செய்து வருவதாகவும், அவரை நம்ம சைடு இழுத்து வந்து செம ஜாலியா ஒரு படம் செய்யணும் எனவும் ஆசைப்படுகிறாராம் வெங்கட் பிரபு.

விஜய் இப்போது இருக்கும் உச்சத்திற்கு வெங்கட்பிரபுவுக்கு வாய்ப்பு தருவாரா என்பதே சந்தேகம்தான். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கேற்ப வெங்கட்பிரபு தொடர்ந்து முயற்சி செய்தால் காய் கனியாகவும் வாய்ப்பிருக்கிறது.

vijay-venkat-prabhu-cinemapettai
vijay-venkat-prabhu-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்