Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட இதெல்லாம் சகஜம் ப்ரோ.. எதற்கு சொல்கிறார் வெங்கட் பிரபு?
இயக்குனர் வெங்கட் பிரபு, ரசிகர் ஒருவர் தன்னிடம் கேட்ட கேள்வி ரொம்ப கூலாக அதெல்லாம் சகஜமப்பா என பதில் சொல்லி இருப்பது வைரலாகி இருக்கிறது.
கோலிவுட்டில் இயக்குனராக சென்னை 28 படத்தின் மூலம் அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இசை குடும்பத்தில் இருந்து வந்த முதல் இயக்குனர் என்பதால் இவருக்கு வரவேற்பு அதிகமாகவே இருந்தது. இரண்டு நடிகர்களை வைத்து படம் பண்ணவே தயங்கிய படக்குழுக்கள் மத்தியில், ஏறத்தாழ ஐந்து முக்கிய நாயகர்களையும், 7 துணை நாயகர்களையும் வைத்து தனது முதல் படத்தில் புது பாணியை பிடித்தார். வெங்கட் பிரபுவின் அறிமுகத்தால் சிவா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், ஜெய், விஜய் வசந்த், இனிகோ பிரபாகர் ஆகியோர் இன்னும் தமிழ் சினிமாவில் கியாரண்டி நாயகர்களாக இருக்கின்றனர்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் வெங்கட் பிரபு. சென்னை 28 படம் வெளியாகி 11 வருடம் முடிந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி டுவீட் தட்டினார். அப்பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் மாஸ் படம் கொடுத்து மார்க்கெட்டை டேமேஜ் செய்ததும் அவர்தான் என பதில் தட்டினார். சற்றும் எதிர்பார்க்காத வகையில், அதற்கு வெங்கட் பிரபுவே பதில் அளித்தார். வெற்றி, தோல்வியெல்லாம் சகஜம் ப்ரோ. எவன் ஒருவன் வெற்றியை மட்டுமே சாதிச்சு இருக்கான் சொல்லுங்க. அதுதான் வாழ்க்கையில் இருக்கும் சமநிலை என்றார். இதற்கு ரசிகர்கள் பலரும் சூப்பர் என பாராட்டி வருகிறார்கள்.
சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் உருவான படம் மாஸ். பேய் படங்கள் ஜானரில் முழுநீள காமெடியாக வெளியாகிய படம். இருந்தும், சில பல லாஜிக் மீறல்களால் படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. மங்காத்தா போன்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனரிடம் இருந்து இதை எதிர்பார்க்காத ரசிகர்கள் செம அப்செட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
